'உங்களுடன் 12 வருடம் வாழ்ந்ததே முட்டாள்தனம்' - டி.இமானின் முன்னாள் மனைவி ட்வீட் வைரல் !

D imman first wife tweets about imman second marriage tweet viral

தமிழ் திரையுலகில் தமிழன் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி. இமான். இதனைத் தொடர்ந்து, விசில் படத்தில் ‘அழகிய அசுரா’ பாடல் வெற்றியைத் தொடர்ந்து, இவர் பிரபலமாக அறியப்பட்டவர்.

பின்னர், ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ள இமான், திருவிளையாடல் ஆரம்பம், கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களின் பாடலுக்காக பல விருதுகளை வென்றார். விஸ்வாசம், சீமராஜா, கடைக்குட்டி சிங்கம், டிக் டிக் டிக், அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் போன்ற பிரபல வெற்றி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

D imman first wife tweets about imman second marriage tweet viral

இவரது குரலுக்கும் இசைக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விஸ்வாசம் பட இசையமைப்பிற்காக கலைமாமணி விருதை வென்றார். இவரது மனைவி மோனிகா அவர்களை பிரிவதாக தனது சமூக வலைத்தளங்களில் அறிவித்திருந்தார்.

நவம்பர் 2020ம் ஆண்டு முதல் பிரிந்து வாழும் இவர்கள், டிசம்பர் 2021ம் ஆண்டு சுமூகமாக பிரிந்தனர். இவர்களுக்கு 2 மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில், இமான் 2வது திருமணம் குறித்து பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. கடந்த சில நாட்களுக்கு முன், திருமண வரவேற்பு குறித்து புகைப்படம் ஒன்று வைரல் ஆனது.

இந்நிலையில், முன்னாள் மனைவி மீது குழந்தைகள் பாஸ்போர்ட் குறித்து இமான் பொய் வழக்கு போட்டதாக தகவல் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது.

இந்நிலையில், இமானின் 2வது திருமணம் குறித்து அவரது முதல் மனைவி பதிவிட்ட பதிவு செம வைரல் ஆகி வருகிறது. அதில், “இமான், உங்கள் 2ம் திருமணத்திற்கு வாழ்த்துக்கள்.

வாழ்க்கையில் 12 வருடங்கள் இருந்த ஒருவரை இவ்வளவு விரைவாக மாற்ற முடியும் என்றால், உங்களை போன்ற ஒருவருக்காக நேரத்தை வீணடித்தது என் முட்டாள்தனம்.

D imman first wife tweets about imman second marriage tweet viral

அதற்காக வருத்தப்படுகிறேன். கடந்த இரண்டு வருடங்களாக உங்கள் சொந்த குழந்தைகளை நீங்கள் பார்க்கவும் இல்லை, தற்போது அவர்களுக்கும் மாற்று கண்டுப்பிடித்துவிட்டீர்களா? எது நடந்தாலும் என் குழந்தைகளை நான் பாதுகாப்பேன். தேவைப்பட்டால் அந்த புது குழந்தையையும் பாதுகாப்பேன். Happy married life.”

என கடுமையாக பதிவிட்டுள்ளார். பாதுகாப்பு குறித்து இவர் பேசியிருப்பது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this post