அம்மாவிற்கு உதட்டில் முத்தம் கொடுத்த தமிழ் பிரபலம்: அதிர்ச்சியில் நெட்டிசன்களின் ரியாக்சன்!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக இருந்து வந்தவர் சாண்டி மாஸ்டர். 2005ம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் choreographer ஆக தனது பயணத்தை தொடங்கியவர். இவர் கலா மாஸ்டரின் ஸ்டுடென்ட் & அசிஸ்டென்ட். மானாட மயிலாட நிகழ்ச்சியில் பல சீசன்களில் choreographer ஆக இருந்து வந்த இவர், நடுவராகவும் இருந்தார்.
மேலும், கிங்ஸ் ஆப் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்து வந்தார். பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்ற இவர், தனது நடவடிக்கைகள் மூலம் மக்கள் நெஞ்சங்களை வென்றார். இவரது முதல் மனைவி நடிகை காஜல் பசுபதி. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
பின்னர், டோரதி என்பவரை காதல் திருமணம் செய்தார் சாண்டி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவ்வப்போது, சாண்டி, டோரதி, டோரதி தங்கை சிந்தியா மூவரும் போட்டோஸ், வீடியோ பதிவிடுவது வழக்கம்.
சமூக வலைதள பிரபலம் மற்றும் டான்சர் சிந்தியா இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் அவர் அவ்வப்போது பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும்.
இந்த நிலையில் சமீபத்தில் தனது அம்மாவின் பிறந்த நாளை கொண்டாடிய சிந்தியா அம்மாவுக்கு லிப் டு லிப் முத்தம் கொடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் ஆதரவு மற்றும் எதிர்மறை கருத்துக்களை தெரிவித்து ரியாக்ஷன் செய்து வருகின்றனர்.