'அப்படி' காட்ட சொன்ன ரசிகர்.. கோபத்தில் CWC சுனிதா செய்த செயல்.. வைரலாகும் பதிவு !
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஜோடி நம்பர் 1 சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தவர் நடிகை சுனிதா. இதனைத் தொடர்ந்து, ஜோடி நம்பர் 1 சீசன் 8 & 9 உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.
மேலும், ஜீ தமிழ் டான்ஸ் இந்தியா டான்ஸ் என்னும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். இப்படி நடன கலையின் மீதுள்ள ஆர்வத்தினால் சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர், தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும், ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 படத்திலும் நடித்துள்ளார்.
இதன் பின்னர், தமிழ் அவ்வளவு பேச தெரியாத சுனிதா, இவர் பேசும் தமிழே இவருக்கு பிளஸ் ஆக மாறிவிட்டது. இதன் மூலம், விஜய் தொலைக்காட்சியில் மக்கள் விரும்பி ரசிக்கும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக தற்போது 3வது சீசனிலும் பங்கேற்று வருகிறார்.
மேலும், சிங்கிள் பொண்ணுங்க, காமெடி ராஜா மற்றும் கலக்கல் ராணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். தற்போது, தனக்கென தனி யூடியூப் சேனல் நடத்தி வரும் சுனிதா, தனது ஹாட் போட்டோக்களை அவ்வப்போது தனது சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.
சுனிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடலில் ஈடுபட்டு ரசிகர்கள் கேள்விக்கு பதில் சொல்லி வந்தார். அப்போது, ஒரு நபர் அவரிடம் பிகினி ஓபன் செய்து காட்டுங்கள் என கேட்டுள்ளார். சுனிதா இனி இந்த செயலை அந்த நபர் வேறு யாரிடமும் செய்யக்கூடாது என்ற நோக்கத்துடன் அந்த நபரின் ஐடியுடன் அவர் இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி போட்டு பதிலடி கொடுத்துள்ளார். இதைப் பார்த்த சுனிதாவின் ரசிகர்கள் சுனிதாவை பாராட்டி வருகின்றனர்.
இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்கள் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது. இது போன்ற நபர்களை இப்படித்தான் அம்பலப்படுத்த வேண்டும் என பலரும் சுனிதாவிற்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.