தோனி முதல் ருதுராஜ் வரை... காத்துவாக்குல ரெண்டு காதல் டூ டூ டூ பாட்டுக்கு steps போட்ட CSK வீரர்கள்.. Viral Video

Csk cricketers dance steps for kaathuvaakula rendu kadhal two two two song viral video

World Cup இணையாக இந்திய ரசிகர்கள் வரவேற்ப்பது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர். ஐபிஎலில் தற்போது 15வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட் என இரண்டு புதிய அணிகள் களமிறங்கி உள்ளதால், போட்டி கடுமையாக உள்ளது. தற்போது லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

Csk cricketers dance steps for kaathuvaakula rendu kadhal two two two song viral video

இதுவரை நடந்த14 சீசன்களிலும் பெரும் கவனத்தை செலுத்தி வந்த மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டு இதுவரை ஆடிய 7 போட்டிகளிலும் தோல்வியுற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

Csk cricketers dance steps for kaathuvaakula rendu kadhal two two two song viral video

குறிப்பாக சென்னை அணி கடைசியாக மும்பை அணிக்கு எதிராக ஆடிய லீக் ஆட்டத்தில் இறுதி ஓவரில், தோனி அடித்த தொடர் 6 மற்றும் 4 பற்றி சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டது. இதனைக் கொண்டாடும் வகையில், சென்னை அணியினர் நடனமாடும் வீடியோ ஒன்றை CSK அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Csk cricketers dance steps for kaathuvaakula rendu kadhal two two two song viral video

அதில் தோனி, பிராவோ, ருதுராஜ் உட்பட அணைத்து CSK அணி வீரர்களும் வேஷ்டி சட்டையுடன் பாரம்பரிய உடையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இடம்பெறும் டூடூடூ பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share this post