'அதிதி சங்கர் இனி என் தங்கச்சி மாதிரி..' கை கூப்பி மன்னிப்பு கேட்ட கூல் சுரேஷ்..வைரல் வீடியோ !
குட்டி புலி படத்தை இயக்கிய இயக்குனர் முத்தையா அவர்களின் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சூரி, கருணாஸ், சரண்யா பொன்வண்ணன், வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விருமன். இப்படத்தை, சூர்யா - ஜோதிகாவின் சொந்த நிறுவனமான 2D Entertainment தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படம் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகியுள்ளது. விருமனின் தாத்தாவாக ராஜ்கிரண், அப்பாவாக பிரகாஷ் ராஜ் நடித்துள்ளனர். அறிமுக நாயகி அதிதி ஷங்கர் எப்படி நடிக்கிறார் என்பதை பார்க்கவே ஒரு கூட்டம் தியேட்டருக்கு படையெடுத்து உள்ளது. கார்த்தியின் கதாபாத்திரம் செம ஜாலியான காட்டுமிராண்டி, ஓப்பனிங் காட்சியிலேயே குச்சி ஐஸ் சாப்பிட்டுக்கிட்டு திருவிழா கூட்டத்தில் ரவுடிகளுடன் சண்டை போடுவது போல அமைந்துள்ளது.
கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிய நடிகை அதிதி சங்கர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார். சமீபகாலமாக காமெடி நடிகராக நடித்து வரும் கூல் சுரேஷ், அனைத்து படங்களுக்கு சென்று பார்த்திவிட்டு விமர்சனத்தை கூறுவார். அந்த வகையில், விருமன் படத்தை பார்த்து விட்டு அதிதி சங்கர் என் காதலி. நான் அவரை காதலிக்கிறேன் என்று கூறி சர்ச்சையில் மாட்டினார்.
அதன்பின் என்ன நடந்ததோ தெரியவில்லை நேற்று வெளியான ஒரு படத்திற்கு விமர்சனம் கொடுக்க வந்த கூல் சுரேஷ் மன்னித்துவிடுங்கள் சங்கர் சார் என்று கெஞ்சியுள்ளார். விருமன் படத்தில் வரும் தேன்மொழி கதாபாத்திரத்தை போன்று இருக்கும் பெண்ணை நான் காதலித்தேன். அதை பார்த்த விரக்தியில் இப்படி நடந்து கொண்டதாகவும் அதிதி சங்கர் இனிமேல் என் தங்கச்சி என்றும் கூறியுள்ளார்.