'மன்னிச்சிவிட்ருங்க.. நம்ம மனசுக்கு நிம்மதியா வாழனும்..' குக் வித் கோமாளி சுனிதா திடீர் பதிவு வைரல் !

Cook with comali sunita gogoi posts getting viral on social media

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஜோடி நம்பர் 1 சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தவர் நடிகை சுனிதா. இதனைத் தொடர்ந்து, ஜோடி நம்பர் 1 சீசன் 8 & 9 உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

Cook with comali sunita gogoi posts getting viral on social media

மேலும், ஜீ தமிழ் டான்ஸ் இந்தியா டான்ஸ் என்னும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். இப்படி நடன கலையின் மீதுள்ள ஆர்வத்தினால் சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர், தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும், ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 படத்திலும் நடித்துள்ளார்.

Cook with comali sunita gogoi posts getting viral on social media

இதன் பின்னர், தமிழ் அவ்வளவு பேச தெரியாத சுனிதா, இவர் பேசும் தமிழே இவருக்கு பிளஸ் ஆக மாறிவிட்டது. இதன் மூலம், விஜய் தொலைக்காட்சியில் மக்கள் விரும்பி ரசிக்கும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக தற்போது 3வது சீசனிலும் பங்கேற்று வருகிறார்.

Cook with comali sunita gogoi posts getting viral on social media

மேலும், சிங்கிள் பொண்ணுங்க, காமெடி ராஜா மற்றும் கலக்கல் ராணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். தற்போது, தனக்கென தனி யூடியூப் சேனல் நடத்தி வரும் சுனிதா, தனது ஹாட் போட்டோக்களை அவ்வப்போது தனது சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

Cook with comali sunita gogoi posts getting viral on social media

சுனிதா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட ஒரு போஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், ‘ ஒருவரை மன்னித்து விட வேண்டும் என்றால் உடனே மன்னித்து விடுங்கள். அது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ, நமக்கு ரெம்ப நல்லது. எதனையும் மனதில் வைத்துகொண்டால் நமக்கு தான் பிரச்சனை. நமக்கு மனசு நிம்மதியா இருந்த போதும்’ என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்ததும் ரசிகர்கள் என்ன ஆயிற்று, ஏதேனும் பிரச்சனையா என பேச ஆரம்பித்து விட்டனர்.

Cook with comali sunita gogoi posts getting viral on social media

Share this post