குக் வித் கோமாளிக்கு எதிர்பாராமல் வந்த பிரபலம்.. செம ஷாக் கொடுத்த என்ட்ரி !

Cook with comali season 3 promo contestants in shock

சின்னத்திரையை பொருத்தவரை சீரியல் தொடர்கள் மட்டுமல்லாது தற்போது நிறைய நிகழ்ச்சிகள் மக்கள் பேவரைட்டாக மாறிவிட்டது. அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக மாறிவிட்டது குக் வித் கோமாளி.

Cook with comali season 3 promo contestants in shock

2 சீசன்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து 3வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இதில் கோமாளிகளாக வரும் ஆர்ட்டிஸ்ட் மூலமே இந்த நிகழ்ச்சியின் வெற்றி.

இந்நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ரக்ஷன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் ஷெஃப் தாமோதரன், ஷெஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.

Cook with comali season 3 promo contestants in shock

இந்நிகழ்ச்சி கொரோனா லாக் டவுன் போது வைரலாகவும், மக்கள் ஸ்ட்ரெஸ் பஸ்டாராக இருந்து வந்தது. அதிலும் இதில் கோமாளிகளாக இருந்து வரும் புகழ், ஷிவாங்கி, பாலா, சுனிதா, மணிமேகலை மக்கள் பேவரைட்.

முதல் சீசனில் வனிதா விஜயகுமார், இரண்டாவது சீசனில் கனி உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

Cook with comali season 3 promo contestants in shock

மூன்றாவது சீசனில் வித்யுல்லேகா ராமன்,ரோஷ்னி ஹரிப்ரியன், ஸ்ருத்திகா அர்ஜுன், கிரேஸ் கருணாஸ், அம்மு அபிராமி, தர்ஷன், சந்தோஷ் பிரதாப், அந்தோணிதாசன், மனோபாலா, ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், சிவாங்கி, சுனிதா, மணிமேகலை, முகம்மது குரைஷி, சக்தி, அதிர்ச்சி அருண், மூக்குத்தி முருகன், பாரத் கே ராஜேஷ், ஷித்தன் கிளாரின், சரத் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர்.

Cook with comali season 3 promo contestants in shock

அடுத்தடுத்து எலிமினேஷன், காமெடி என கலவையாக இருந்து வரும் இந்நிகழ்ச்சியில், நடுவர் மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் பேசிய வீடியோ தற்போது செம பேச்சு பொருளாக மாறி உள்ளது. இந்த நிகழ்ச்சி ஊரடங்கு சமயத்தில் நிறைய பேருக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டராக அமைந்தது என்பது உண்மை.

Cook with comali season 3 promo contestants in shock

குக் வித் கோமாளி 3ம் சீசன் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இந்த வாரம் போட்டியாளர்களுக்கு செமி பைனல் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே ஸ்ருத்திகா பைனலுக்கு முன்னேறி இருக்கும் நிலையில் இந்த செமி பைனலில் ஜெயிப்பவர்கள் பைனலுக்கு முன்னேறுவார்கள். மேலும் ஒருவர் எலிமினேட் ஆவர்.

Cook with comali season 3 promo contestants in shock

இந்நிலையில் இந்த வார எபிசோடில் விருந்தினராக சன் டிவி மாஸ்டர் செஃப் ஷோ நடுவர் கௌஷிக் வந்திருக்கிறார். “நான் ரொம்ப நல்லவன் கிடையாது” என அவர் பேசியதை கேட்டு போட்டியாளர்கள் ஷாக் ஆகியுள்ளனர். போட்டியாளர்கள் செய்யும் டிஷ் பார்த்து அவர் என்ன கமெண்ட் சொல்ல போகிறார் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இன்னும் சிலர், வெங்கடேஷ் பட் சார் வேணும் அடுத்த வாரம் அவரை வரச் சொல்லுங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share this post