'பொண்ணுங்கனு பாக்காம இப்டி பண்றீங்க.. ஷோக்காக சுனிதா'வ use பண்றீங்கனு சொல்றாங்க..‘ எமோஷனல் ஆன CWC சந்தோஷ்..!

Cook with comali fame santhoh prathap about bad comments in social media

சின்னத்திரையை பொருத்தவரை சீரியல் தொடர்கள் மட்டுமல்லாது தற்போது நிறைய நிகழ்ச்சிகள் மக்கள் பேவரைட்டாக மாறிவிட்டது. அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக மாறிவிட்டது குக் வித் கோமாளி.

Cook with comali fame santhoh prathap about bad comments in social media

2 சீசன்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து 3வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இதில் கோமாளிகளாக வரும் ஆர்ட்டிஸ்ட் மூலமே இந்த நிகழ்ச்சியின் வெற்றி.

இந்நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ரக்ஷன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் ஷெஃப் தாமோதரன், ஷெஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.

Cook with comali fame santhoh prathap about bad comments in social media

இந்நிகழ்ச்சி கொரோனா லாக் டவுன் போது வைரலாகவும், மக்கள் ஸ்ட்ரெஸ் பஸ்டாராக இருந்து வந்தது. அதிலும் இதில் கோமாளிகளாக இருந்து வரும் புகழ், ஷிவாங்கி, பாலா, சுனிதா, மணிமேகலை மக்கள் பேவரைட்.

முதல் சீசனில் வனிதா விஜயகுமார், இரண்டாவது சீசனில் கனி உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

Cook with comali fame santhoh prathap about bad comments in social media

மூன்றாவது சீசனில் வித்யுல்லேகா ராமன்,ரோஷ்னி ஹரிப்ரியன், ஸ்ருத்திகா அர்ஜுன், கிரேஸ் கருணாஸ், அம்மு அபிராமி, தர்ஷன், சந்தோஷ் பிரதாப், அந்தோணிதாசன், மனோபாலா, ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், சிவாங்கி, சுனிதா, மணிமேகலை, முகம்மது குரைஷி, சக்தி, அதிர்ச்சி அருண், மூக்குத்தி முருகன், பாரத் கே ராஜேஷ், ஷித்தன் கிளாரின், சரத் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர்.

Cook with comali fame santhoh prathap about bad comments in social media

2வது சீசனில், அஸ்வின் மீது க்ரஷ் என சிவாங்கி மற்றும் சுனிதா அடித்த லூட்டி மக்களால் ரசிக்கப்பட்டது. இந்த சீசனில் சுனிதா சார்பேட்டா பரம்பரை பட புகழ் சந்தோஷ் மீது க்ரஷ் இருப்பதாக கலாய்த்து வருகிறார். இந்நிலையில், நிகழ்ச்சியில் இருந்து சந்தோஷ் வெளியேறினார்.

Cook with comali fame santhoh prathap about bad comments in social media

பின்னர், சமீபத்தில் பேட்டியளித்த சந்தோஷிடம், ரோஷினி அல்லது சுனிதா இதில் ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் என்றால் யாரை செய்வீர்கள் என கேட்டதற்கு அவர், சுனிதா எனக்கு நல்ல தோழி, அதனால் அவரை திருமணம் செய்ய ஒப்புக் கொள்வேன் என கூறியுள்ளார்.

Cook with comali fame santhoh prathap about bad comments in social media

சில வாரங்களுக்கு முன் சந்தோஷ் பிரதாப்பின் எலிமினேட் ஆனது போட்டியாளர்கள், கோமாளிகள் மற்றும் ரசிகர்கள் என பலரையும் கவலையில் ஆழ்த்தியது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சந்தோஷ் பிரதாப்க்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

Cook with comali fame santhoh prathap about bad comments in social media

இந்நிலையில், தற்போது சந்தோஷ் எமோஷனலாக பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக தான் நான் சுனிதாவை யூஸ் பண்ணேன் என பலர் கூறுகிறார்கள். ஆனால், நான் அப்படி எதுவும் செய்யவில்லை. சுனிதா எனக்கு ஒரு நல்ல தோழி என்று கூறியிருக்கின்றார். சிலது ஷோவில் நடப்பதை தவறாக புரிந்து கொண்டு கமெண்ட் செய்கிறார்கள் அது வருத்தமளிப்பதாக கூறியுள்ளார்.

Share this post