இவ்ளோ ஸ்லிம்மா 'குக் வித் கோமாளி' தீபா அக்காவா? ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் போட்டோஸ்!

விஜய் டிவியில் மக்கள் பேராதரவு பெற்று ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பலர் இன்று நல்ல வாய்ப்புகள் பெற்று இன்று திரையுலகிலும் முன்னணி நட்சத்திரங்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான தீபா அனைவரையும் மனதையும் வென்றார்.
அவரது கள்ளங்கபடம் இல்லாத சிரிப்பு, வட்டார பேச்சு, சிரித்த முகம் ஆகியவை அனைவரையும் கவர்ந்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மேலும் சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்த தீபா தற்போது பிஸியான குணசேத்திர நடிகையாக மாறி உள்ளார்.
தீபா நிறைய சீரியல் தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் தீபா தனது சமூக வலைதள பக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். குக் வித் கோமாளி தீபா அக்கா இவ்வளவு ஸ்லிம்மாக இருந்தாரா என்று கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.