ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் பான் இந்தியா படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் ! வைரலாகும் பர்ஸ்ட் லுக் !

Cook with comali fame actor in ar murugadoss film

அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குனர் முருகதாஸ்.

இதனைத் தொடர்ந்து, ரமணா, கஜினி, 7ம் அறிவு, துப்பாக்கி என அடுத்தடுத்து சூப்பர் டூப்பர் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்களை தந்து தமிழ் திரையுலகை மட்டுமல்லாது இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர் முருகதாஸ்.

Cook with comali fame actor in ar murugadoss film

கத்தி, சர்க்கார், ஸ்பைடர், தர்பார் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். மேலும், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, மான் கராத்தே போன்ற படங்களை தயாரித்தும் உள்ளார்.

Cook with comali fame actor in ar murugadoss film

நீண்ட இடைவெளிக்கு பின், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ள படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகி உள்ளது.

இப்படத்துக்கு ஆகஸ்ட் 16,1947 என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ளார்.

Cook with comali fame actor in ar murugadoss film

மேலும் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படத்தை பான் இந்தியா படமாக வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

Cook with comali fame actor in ar murugadoss film

Share this post