"2 வருஷமா வாடகை கட்டல…ரூ.20 லட்சம் பாக்கி" - யுவன் சங்கர் மீது பாய்ந்த புகார்!
இசைஞானி இளையராஜாவின் மகனும் தமிழ் சினிமாவின் பிரபல இசை அமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா மீது முகமது ஜாவித் என்பவர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் அதிரடியான புகார் ஒன்றை கூறி இருக்கிறார். அதில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வாடகை வீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வசித்து வருகிறார்.
இந்த வீடு எனது சகோதரிக்கு சொந்தமானது. இதுநாள் வரை அவர் இந்த வீட்டிற்கு வாடகை வாங்கி கொடுக்கவே இல்லை. கிட்டத்தட்ட ரூ.20 லட்சம் வரை பாக்கி கிடக்கிறது. இது குறித்து எனது சகோதரி பலமுறை அவரிடம் கேட்டுக் கூட அவர் கொடுக்க மறுத்திருக்கிறார் நான் வாடகை பணம் கேட்பதற்கு செல்போனில் அழைத்தபோதும் அவர் போனை எடுக்கவில்லை.
அது மட்டும் இல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துக் கொண்டு காலி செய்வதாக பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கூறினார்கள். எனவே அவரிடம் இருந்து வாடகை பாக்கி மற்றும் வீடு சேதத்துக்கான இழப்பீட்டை பெற்றுத் தர வேண்டும் என்று அந்த புகாரில் அவர் கூறியிருக்கிறார். இதை அடுத்து இந்த புகாரை போலீஸ் விசாரணை நடத்த துவங்கியிருக்கின்றனர்.
இந்த புகார் ஆனது தற்போது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த இந்த விஷயம் தற்போது கோலிவுட் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மிகப்பெரிய இசை குடும்பத்தை சேர்ந்த யுவன் சங்கர் ராஜாவிடம் பணமா இருக்காது?
ஏன் இப்படி அடுத்தவர் வயிற்றிச்சலுக்கு ஆளாகிறார்? என கூறிய யுவன் சங்கர் ராஜாவை பலரும் திட்டி தீத்து விமர்சித்து வருகிறார்கள். ஒரு படத்திற்கு லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் யுவன் சங்கர் ராஜாவால் வாடகை பணம் கொடுக்கும் முடியவில்லையா? என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஆனால், இந்த விவகாரம் குறித்து யுவன் சங்கர் ராஜா தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் இதுவரை வெளியாகவில்லை. யுவன் சங்கர் ராஜா தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.