மேடையில் அபர்ணா பாலமுரளியிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட கல்லூரி மாணவர்.. வைரல் வீடியோ

தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் 18 வயது முதல் நடிக்கத் தொடங்கியவர் நடிகை அபர்ணா பாலமுரளி. தமிழில் 2017ம் ஆண்டு வெளியான 8 தோட்டாக்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார்.
பொம்மியாக சூரரை போற்று திரைப்படத்தில் சூர்யா ஜோடியாக மக்கள் மனதில் பெரிதும் நின்றவர். இதனைத் தொடர்ந்து, சர்வம் தாள மயம், வீட்ல விஷேஷம், தீதும் நன்றும் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அவர் நடிப்பில் தற்போது தன்கம் என்கிற மலையாள படம் வருகிற ஜனவரி 26ம் தேதி ரிலீஸாக உள்ளது. சஹீத் அராபத் இயக்கியுள்ள இப்படத்தில் வினீத் ஸ்ரீனிவாசனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தன்கம் படத்தின் புரமோஷனுக்காக கேரளாவில் உள்ள சட்டக்கல்லூரி ஒன்றில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
அப்போது மேடையில் அமர்ந்திருந்த நடிகை அபர்ணா பாலமுரளியிடம் வந்த கல்லூரி மாணவர் ஒருவர், அவருக்கு பூ கொடுத்துவிட்டு, சட்டென அவரது கையை பிடித்துள்ளார். பின்னர் அவருடன் போட்டோ எடுப்பதற்காக எழுந்தபோது அந்த மாணவர் தோல்மீது கையை போட்டதை சற்றும் விரும்பாத அபர்ணா, அவரின் பிடியில் இருந்து நழுவி மீண்டும் தனது இருக்கையில் சென்று அமர்ந்தார்.
பின்னர் மீண்டும் மேடை ஏறி வந்த அந்த மாணவர், தான் தவறாக எதுவும் நடந்துகொள்ளவில்லை. உங்களின் ரசிகனாக உங்களுடன் போட்டோ எடுக்க தான் வந்தேன் என விளக்கம் அளித்துவிட்டு மீண்டும் அபர்ணாவுக்கு கைகொடுக்க முயன்றார். அப்போது அந்த நபருக்கு கைகொடுக்க மறுத்துள்ளார் அபர்ணா பாலமுரளி. இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
തോളില് കൈയ്യിടാന് ശ്രമം; അപര്ണ ബാലമുരളിയോട് മോശമായി പെരുമാറി വിദ്യാര്ഥി#AparnaBalamurali #vineethSreenivasan #Lawcollege pic.twitter.com/1EHgSioHXf
— OneIndia Malayalam (@thatsMalayalam) January 18, 2023