விஷால் - சிம்புவுக்கே கல்யாணம் ஆகிருமா ? கலகலப்பான முக்கோண காதல் கதையுடன் வெளியான 'காபி வித் காதல்' ட்ரைலர்..
நகைச்சுவை திரைப்படங்கள் தந்து ரசிகர்களை சிரிப்பலையில் மிதக்க வைப்பவர் இயக்குனர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் வெளியான வின்னர், கலகலப்பு, முறைமாமன், உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், கிரி, அரண்மனை என பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை தந்தவர். ஆனால், சமீபகாலத்தில் இவர் இயக்கிய ஆக்ஷன், அரண்மனை 3 போன்ற படங்கள் படு தோல்வியை சந்தித்தன.
தற்போது இவர் இயக்கத்தில் ‘காபி வித் காதல்’ என்னும் நகைச்சுவை திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், மாளவிகா மேனன், ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், பிக்பாஸ் சம்யுக்தா, தொகுப்பாளினி டிடி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
வின்னர் திரைப்படத்திற்கு பின்னர் 18 ஆண்டுகள் கழித்து இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா - சுந்தர் சி கூட்டணி இணைந்துள்ளது. இப்படத்தை நடிகை குஷ்பு தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுபெற்று வரும் அக்டோபர் 7ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் கலர் ஃபுல் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.