Cobra Trailer விழாவில் விக்ரம் செய்த செயல்.. விழா மேடையில் நெகிழ்ந்து போன VJ அஞ்சனா !
DD, விஜே மஹேஸ்வரி, மணிமேகலை வரிசையில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் ஆன விஜேக்களில் அஞ்சனா ரங்கனும் ஒருவர். சன் மியூசிக் தொலைக்காட்சியில் பிரபல விஜேவாக பணியாற்றி வந்தவர்.
மிஸ் சின்னத்திரை 2008 பட்டத்தை வென்ற இவர், நிறைய பிரபல ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளார். நீங்களும் நாங்களும், நம்ம ஸ்டார், கொஞ்சம் உப்பு கொஞ்சம் காரம், பாட்டு புதுசு உள்ளிட்ட நிறைய ஷோக்களை நடத்தியுள்ளார்.
திடீரென 10 வருடகாலம் பிரேக் எடுத்த அஞ்சனா குடும்பம், குழந்தை என செட்டில் ஆகிவிட்டார். கயல் திரைப்படத்தின் நடிகர் சந்திரன் அவர்களை திருமணம் செய்த இவருக்கு ஒரு மகனும் உள்ளார்.
2019ம் ஆண்டு, திரைக்கு மீண்டும் திரும்பிய அஞ்சனா, ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ், நட்சத்திர ஜன்னல்கள், சண்டே கொண்டாட்டம் போன்ற நிகழ்ச்சிகளில் விஜேவாக பணியாற்றினார்.
தற்போது, முதலில் இல்லாத அளவிற்கு சமூக வலைத்தளங்களில் ஹாட் போட்டோஸ் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதற்கு ரசிகர்களும் தங்களுக்கு தோன்றும் வண்ணம் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படம் கோப்ரா. இவர் ஏற்கனவே, டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து தான் கோப்ரா படத்தை இயக்குவதால் இப்படத்தின் மீது ஆர்வம் அதிகரித்தது.
கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க லலித் குமார் தயாரிக்கிறார்.
இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ப்ரோமோஷன் விழாக்கள் தடபுடலாக நடைபெற்று வருகிறது. இதற்கு படக்குழுவினர் நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.
இந்நிகழ்வை தொகுத்து வழங்கிய விஜே அஞ்சனாவுக்காக விக்ரம் ஹேப்பி பர்த்டே பாடியுள்ளார். இதனால் விஜே அஞ்சனா மேடையிலேயே நெகிழ்ந்து போய்விட்டார். இது தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ள விஜே அஞ்சனா, “இன்று பணிநாள். கோப்ரா ட்ரைலர் விழாவை தொகுத்து வழங்கினேன். பொதுவாக நான் என் பிறந்த நாளில் இப்படி பணிபுரிந்ததில்லை.
ஆனால் என் பிறந்த நாளின் இன்றைய நாளில் நான் பணி செய்வது சிறப்பான நாளாகவே இருந்தது. உங்கள் அன்புக்கு நன்றி விக்ரம் சார். தவிர, என் பிறந்த நாளுக்கு வாழ்த்தி அனைவரும் ஹேப்பி பர்த்டே பாடுவது மிகவும் அற்புதமான உண்ர்வு, நீங்கள் என் நாளை சிறப்பாக்கியுள்ளீர்கள். இதுபோதும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
I worked for the first time on my birthday and dearest @chiyaan sir made it so special for me! Hearing everyone in the event singing happy birthday was something else! ❤️❤️❤️ My day is made! @proyuvraaj ❤️ @UVCommunication #CobraTrailerLaunch #CobraFromAugust31 pic.twitter.com/DunMWOARqS
— Anjana Rangan (@AnjanaVJ) August 25, 2022