நயன்தாரா அந்தரங்க அங்கத்தை கொச்சைபடுத்தி கமெண்ட்.. சின்மயி ஆவேசம்..

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடலை பாடியதன் மூலம் தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. இதையடுத்து பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய சின்மயி, குறுகிய காலத்திலேயே பல பேமஸ் பாடல்களை பாடியதன் மூலம் பிரபலம் அடைந்தவர்.
வாராயோ வாராயோ, சர சர சாரா காத்து, இதயத்தில் ஏதோ, கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியான 96 படத்தில் அவர் பாடிய பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கொடுத்த மீடூ புகார் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்காக பல்வேறு எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், தன்னுடையை நிலைப்பாட்டில் தீர்க்கமாக உள்ள சின்மயி, தனது கருத்துக்களை இடைவிடாது பதிவிட்டு வருகிறார். மேலும், பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், நயன்தாரா உருவத்தை மோசமாக கமண்ட் செய்ததை பார்த்து சின்மயி கோபமாக பதிவிட்டிருந்தார். தமிழ் சினிமாவின் 10 ஆண்டுக்கும் மேலாக லேடி சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தற்போது நயன்தாரா நடிப்பில் ‘கனெக்ட்’ திரைப்படம் வெளியாகி உள்ளது. ஹாரர் திரில்லர் படமாக வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது.
சமீபத்தில் நயன்தாரா இந்த படத்தின் preview ஷோவிற்கு தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் வந்து இருந்தார். அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் ஒரு பிரபலமான ஊடகம் ஒன்று பகிர்ந்து இருந்தது. அந்த பதிவிற்கு கீழ் பல கமெண்டுகளில் நயன்தாராவின் மார்பகங்களை பற்றி மோசமாக தான் வந்து இருந்தது. இப்படி ஒரு நிலையில் அந்த மோசமான கமெண்ட்களை எல்லாம் பகிர்ந்து ஒரு பெண்ணை இப்படியா விமர்சனம் செய்வது என்று சின்மயி தனது ஆதங்கத்தை தெரிவித்து இருக்கிறார்.
அதே போல இப்படி மோசமாக கமன்ட் செய்வதை கண்டித்து பெண் ஒருவர் கமண்ட் செய்து இருந்தார். ஆனால், அந்த கமெண்டை அந்த பக்கத்தின் admin நீக்கி இருப்பது போல தெரிகிறது. இப்படி ஒரு பெண்ணை பற்றி வரும் மோசமான கமெண்டுகளை டெலீட் செய்யாமல், மோசமான கமண்ட் செய்பர்களை தட்டி கேட்கும் நபர்களின் கமெண்டுகளை டெலீட் செய்து வருகின்றனர் என்று சின்மயி குற்றம்சாட்டி இருக்கிறார்.
மேலும், அந்த பதிவில் தம்மால் எந்த கமெண்டையும் போடாமல் தடுத்து இருக்கிறார்கள் என்றும் ஆதங்கத்தை தெரிவித்து இருக்கிறார். இதற்கு முன்னர், நயன்தாரா திருமணம், வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றது என பல்வேறு சர்ச்சைகளுக்கு சப்போர்ட் செய்து பதிவிட்டு வந்தார்.