'சில்லா சில்லா' - இந்த பிரபல தமிழ் ஹிட் பாடலின் காப்பியா? ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

chilla chilla song from thunivu is trolled as copycat song from jai sulthan hit song

தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.

chilla chilla song from thunivu is trolled as copycat song from jai sulthan hit song

தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார். அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள். அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை.

chilla chilla song from thunivu is trolled as copycat song from jai sulthan hit song

தற்போது, வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் கழித்து அஜித் ‘துணிவு’ படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து, அஜித் விக்னேஷ் சிவன் கூட்டணியில் AK62 உருவாகவுள்ளது. துணிவு படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் வைரலானது.

chilla chilla song from thunivu is trolled as copycat song from jai sulthan hit song

இப்படம், 1985ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கதையாம். மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பாவ்னி, சிபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இதன் அப்டேட் கேட்டு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

chilla chilla song from thunivu is trolled as copycat song from jai sulthan hit song

இப்படத்தில் இருந்து, ஜிப்ரன் இசையில், சில்லா சில்லா பாடல் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இப்பாடல் காப்பி ட்ரோல்களிலும் சிக்கியுள்ளது. கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் ஜெய் சுல்தான் பாடல் போலவே இப்பாடல் இருப்பதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

chilla chilla song from thunivu is trolled as copycat song from jai sulthan hit song

Share this post