அந்த பொண்ணு இரும்பு மனுஷி.. சமந்தாவை தூக்கி போட்ட நாக சைதன்யா.. பிரபலம் வேதனை..!(Video)

cheyyaru-balu-talks-about-naga-chaitanya-and-sobhita-dhulipala-engagement

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா துலிபாலா இருவரும் காதலிப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது இருவருக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இதுகுறித்து, பேசிய செய்யாறுபாலு ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து சினிமா பின்னணி எதுவுமே இல்லாத சமந்தா இந்த உயரத்திற்கு வந்ததற்கு காரணம் அவரின் உழைப்புதான். விவாகரத்து செய்த போது, இவர் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

cheyyaru-balu-talks-about-naga-chaitanya-and-sobhita-dhulipala-engagement

குழந்தை பெற்றுக்கொள்ள சம்மதிக்கவில்லை. வேறு ஒரு நடிகருடன் தொடர்பு, ஜீவனாம்சத்திற்காக விவாகரத்து பெறுகிறார் என்றும், சமந்தா குறித்து படுமோசமான விமர்சனங்கள் முன் வந்தன. இப்படி வந்த எல்லா விமர்சனத்தையும் சமந்தா எதிர்கொண்டார். இவர் மீது விமர்சனம் ஒரு பக்கம் இருக்க, அறிய வகை நோயால், அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நேரத்தில், நாக சைதன்யா திருமணம் குறித்து அறிவிப்பு வந்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது. திருமணம் செய்து கொண்டு இருவரும் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஒன்றாக சுக துக்கத்தை பகிர்ந்து இருப்பார்கள். அப்படி இருக்கும்போது, சமந்தா நோயோடு போராடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நாக சைதன்யா இப்படி நடந்து கொள்ளலாமா அவர் ஒரு சக மனிதனாக நடந்து கொள்ளவில்லை என்றும், சமந்தா ஒரு இரும்பு மனுஷி என்று பேசியுள்ளார்.

Share this post