அடுத்த நதியா அன்னா பென்…. வாய்ப்புகள் வட்டமடிக்கும் - பாராட்டிய தள்ளிய பிரபலம்!

cheyyar-balu-praised-actress-anna-ben

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகர் என்ற இடத்தைப் பிடித்தவர் சூரி. இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொண்டு எண்ணிக்கை விட அதிகமாக பரோட்டா சாப்பிட்டதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்த காமெடி நடிகராக இடத்தைப் பிடித்தார் .

தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் விஷால், விஜய், அஜித் என பல சூப்பர் ஹிட் ஹீரோக்களின் படங்களுடன் நடித்து பிரபலமான காமெடி நடிகராக பலம் வந்தார். இதனிடையே அவர் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அசத்திருந்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

cheyyar-balu-praised-actress-anna-ben

இந்த நிலையில் தற்போது மீண்டும் சூரியின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “கொட்டுக்காளி” பி எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அன்னா பென் நடித்திருக்கிறார். சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்த திரைப்படம் இன்று திரையரங்கில் ரிலீஸ் ஆகி ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

கிராம பின்னணியில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் ஒரு பாடல் கூட இல்லை. மேலும் பின்னணி இசை இல்லை. படத்தில் லைவ் சவுண்ட் முறை பின்பற்றப்பட்டுள்ளது இதுவே இப்படத்தின் மிகப்பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் இப்படத்தைப் பார்த்து பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு இது போன்ற திரைப்படங்களை தயாரிக்கும் ஒரு கெத்து, தைரியம் , தில்லு சிவகார்த்திகேயன் மட்டும் சிவகார்த்திகேயனுக்கு மட்டுமே இருக்கு. ஆம் இதுபோன்ற கதைக்களத்தில் வரும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வரும்போது சமுதாயத்தில் கட்டாயமாக ஒரு மாற்றம் ஏற்படும்.

விடுதலை, கருடன் திரைப்படங்களுக்கு அடுத்ததாக நடிகர் சூரி இந்த திரைப்படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனாலும் அவரது நடிப்பையே விழுங்க கூடிய அளவுக்கு நடிகை அன்னா பென் நடிப்பு சிறப்பாக இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

cheyyar-balu-praised-actress-anna-ben

கொட்டுக்காலி திரைப்படத்தில் பெண்கள் மீது திணிக்கப்படும் தேவையில்லாத விஷயங்களை மிகச்சிறப்பாக எடுத்துக் காட்டியதோடு பெண்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறை அறியாமை போன்ற எதார்த்தமான விஷயங்களை வெளிப்படுத்தி இருக்கும் இந்த திரைப்படத்தில் அன்னா பென் தவிர வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது என்று படம் பார்க்கும் அனைவருக்கும் தோணிடும்.

அந்த அளவுக்கு அன்னா பென் சவால் மிகுந்த இந்த கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பான முறையில் கையாண்டு நடித்திருக்கிறார். படம் முழுக்க அவரது நடிப்புக்கு பாராட்டு அள்ளிவிட்டது என செய்யார் பாலு இந்த பேட்டியில் மிகுந்த பாராட்டுகளை தெரிவித்திருந்தார்.

Share this post