சென்னை யாருக்கு சொந்தம்?.. மறைமுகமாக தாக்கிய சேரன்; என்ன இப்படி சொல்லிட்டாரு..!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகர் சேரன். இவர் பெயர் சொல்லும் படியாக பல படங்களை இயக்கி மற்றும் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் சமீபத்தில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார்.
அதாவது, யோகி பாபு நடித்த போட் படத்தை சமீபத்தில் பார்த்ததாகவும், தனக்கு அந்த படம் மிகவும் பிடித்திருந்ததாகவும் தெரிவித்திருந்தார். மேலும், அதே நேரத்தில் சென்னை யாருக்கு சொந்தம் என்பதை குறிப்பிட்டு ஒரு கருத்தை வெளியிட்டு இருந்தார்.
அதாவது, பா ரஞ்சித் சமீபத்தில் சென்னை எங்களுக்கு சொந்தம். நாங்கள் இல்லாமல் சென்னையில் ஜெயித்து விட முடியுமா என்று பேசி இருந்தார். இதனைக் குறிப்பிட்டு பா ரஞ்சித்தை மறைமுகமாக சேரன் தாக்கியதாக நெட்டிசன்கள் கருத்துக்களில் தெரிவித்து வருகின்றனர்.
Share this post