'8 வருஷம் குழந்தை இல்ல.. CWCனால stress போயிருச்சு.. இப்போ pregnantஆ இருக்கேன்' - வைரலாகும் செஃப் வெங்கடேஷ் பட் வீடியோ !

Chef venkatesh bhat cook with comali speech getting viral on social media

சின்னத்திரையை பொருத்தவரை சீரியல் தொடர்கள் மட்டுமல்லாது தற்போது நிறைய நிகழ்ச்சிகள் மக்கள் பேவரைட்டாக மாறிவிட்டது. அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக மாறிவிட்டது குக் வித் கோமாளி.

Chef venkatesh bhat cook with comali speech getting viral on social media

2 சீசன்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து 3வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இதில் கோமாளிகளாக வரும் ஆர்ட்டிஸ்ட் மூலமே இந்த நிகழ்ச்சியின் வெற்றி.

இந்நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ரக்ஷன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் ஷெஃப் தாமோதரன், ஷெஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.

Chef venkatesh bhat cook with comali speech getting viral on social media

இந்நிகழ்ச்சி கொரோனா லாக் டவுன் போது வைரலாகவும், மக்கள் ஸ்ட்ரெஸ் பஸ்டாராக இருந்து வந்தது. அதிலும் இதில் கோமாளிகளாக இருந்து வரும் புகழ், ஷிவாங்கி, பாலா, சுனிதா, மணிமேகலை மக்கள் பேவரைட்.

முதல் சீசனில் வனிதா விஜயகுமார், இரண்டாவது சீசனில் கனி உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

Chef venkatesh bhat cook with comali speech getting viral on social media

மூன்றாவது சீசனில் வித்யுல்லேகா ராமன்,ரோஷ்னி ஹரிப்ரியன், ஸ்ருத்திகா அர்ஜுன், கிரேஸ் கருணாஸ், அம்மு அபிராமி, தர்ஷன், சந்தோஷ் பிரதாப், அந்தோணிதாசன், மனோபாலா, ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், சிவாங்கி, சுனிதா, மணிமேகலை, முகம்மது குரைஷி, சக்தி, அதிர்ச்சி அருண், மூக்குத்தி முருகன், பாரத் கே ராஜேஷ், ஷித்தன் கிளாரின், சரத் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர்.

Chef venkatesh bhat cook with comali speech getting viral on social media

அடுத்தடுத்து எலிமினேஷன், காமெடி என கலவையாக இருந்து வரும் இந்நிகழ்ச்சியில், நடுவர் மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் பேசிய வீடியோ தற்போது செம பேச்சு பொருளாக மாறி உள்ளது. இந்த நிகழ்ச்சி ஊரடங்கு சமயத்தில் நிறைய பேருக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டராக அமைந்தது என்பது உண்மை.

அந்த வகையில், குழந்தை இல்லாமல் ஹாஸ்பிடல் ஹாஸ்பிடலாக சென்று லட்சக்கணக்கில் செலவு செய்து வந்த ஒரு தம்பதி, குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்த்தால் ஸ்ட்ரெஸ் குறைந்து குழந்தை பிறந்துள்ளதாக ஒரு பெண் சொன்னதாக கூறியிருந்தார் செஃப் வெங்டேஷ் பட்.

Chef venkatesh bhat cook with comali speech getting viral on social media

அதனை தற்போது நெட்டிசன்கள் வைரல் செய்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பத் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். அந்த வகையில், எழுந்த சர்ச்சைக்கு பதில் அளிக்கும் விதமாக அவர் பதிவிட்ட, ‘உங்கள் அனைத்து பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. நீங்கள் உறங்க செல்லும் முன் மனம்விட்டு சிரிப்பீர்கள் என்று நினைக்கும் போது உற்சாகமாக இருக்கிறது. இதை ஒரு டிவி நிகழ்ச்சியாக மட்டும் பாருங்கள், இதில் எதையும் எடைபோட வேண்டாம்.

Chef venkatesh bhat cook with comali speech getting viral on social media

நாங்கள் செய்யும் அணைத்து விஷயங்களும் உங்களை சிரிக்க வைக்கத்தான். உங்களில் ஒரு சிலர் என் செயலால் காயப்பட்டு இருக்கலாம். ஆனால், நீங்கள் பார்ப்பது போல என்னுடைய எந்த செயலும் யாரையும் காயப்படுத்து.

நாங்கள் எந்த அளவிற்கு ஜாலியாக இருக்கிறோம் என்பதை காட்ட அப்படி உங்களுக்கு அது காட்டப்படலாம். நிகழ்ச்சியை பார்த்து ரசியுங்கள், அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள்’ என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this post