சந்திரமுகி 2 தயாரிப்பை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. இணையத்தில் லீக் ஆன அப்டேட் !

Chandramukhi 2 to start shooting soon with ragava lawrence

2005ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, நாசர், வடிவேலு, சோனு சூட், வினீத், மாளவிகா, கே.ஆர்.விஜயா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகிய காமெடி ஹாரர் திரைப்படம் சந்திரமுகி.

இப்படம் மலையாள திரைப்படமான Manichitrathazhu படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

Chandramukhi 2 to start shooting soon with ragava lawrence

சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.

பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்சனை பார்த்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ஜோதிகாவின் நடிப்பு பயணத்தில் நல்ல மைல்கல்லை அமைத்து தந்தது.

Chandramukhi 2 to start shooting soon with ragava lawrence

இதன் தொடர்ச்சியாக, ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் 2ம் பக்கத்தில் நடிக்கவுள்ளார் எனவும், இயக்குனர் பி.வாசு இந்த படத்தின் ஷூட்டிங்கை விரைவில் தொடங்குவுள்ளார் என பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

இப்படத்தில் அனுஷ்கா நாயகியாக நடிக்கவுள்ளதாக கூறி சில போஸ்டர்களும் இணையத்தில் வைரல் ஆகியது.

Chandramukhi 2 to start shooting soon with ragava lawrence

இந்நிலையில் சந்திரமுகி 2வை தயாரிப்பதாக இருந்த சன் பிக்சர்ஸ் பின் வாங்கியதால் படப்பிடிப்பு துவங்கவில்லை, லைகாவுடன் ஒப்பந்தமான பி.வாசு தற்போது மீண்டும் திரைக்கதையை துவங்கியுள்ளாராம். எனவே விரைவில் இப்படம் குறித்த தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.

Chandramukhi 2 to start shooting soon with ragava lawrence

Share this post