'காசு பணம் துட்டு' கல்யாணத்திற்கு செல்ல காசு வாங்கும் பிரபலங்கள்.. அதிர்ச்சியை கிளப்பிய நடிகர்..! (Video)

celebrities-getting-paid-for-attending-marriage

தெலுங்கு திரை உலகில் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுனா கூறிய விஷயம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதாவது, திருமணங்களில் கலந்து கொள்ள சினிமா நட்சத்திரங்கள் காசு வாங்குவார்கள் என அவர் கூறியுள்ளார்.

இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் முதல் ஆளாக இருந்து வருபவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் என்ற மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி உலகமே அண்ணாந்து பார்க்கும் வகையில் வானளவு உயர்ந்திருக்கும் அம்பானி சுமார் ரூ. 9,43,091 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கிறார். இதன் மூலம் உலகத்தின் 11வது பெரும் பணக்காரர் என்ற இடத்தை பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி. முகேஷ் அம்பானிக்கு ஆகாஷ் அம்பானி – இஷா அம்பானி என்ற இரட்டை குழந்தையும், ஆனந்த் அம்பானி என்ற இளைய மகனும் உள்ளனர். இதில் ஆனந்த் அம்பானிக்கு வருகிற ஜூலை 12ம் தேதி திருமணம் நடைப்பெற்றது.

celebrities-getting-paid-for-attending-marriage

இந்நிலையில், அம்பானி மகன் திருமணம் மிகப் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்த திருமணத்திற்காக 5000 கோடி செலவு செய்து உள்ளார்களாம். திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு ரெண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரம் வழங்கப்பட்டது. மேலும், திருமணத்தில் பங்கேற்ற பிரபலங்கள் காசு வாங்கிக்கொண்டு தான் வந்தார்கள் என ஒரு பக்கம் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இந்த சூழ்நிலையில் தற்போது நாகார்ஜுனா பேசிய விஷயம் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

Share this post