தனுஷ், பிரியங்கா மோகன் உட்பட படக்குழுவினர் இணைந்து வெளியிட்ட கேப்டன் மில்லர் மாஸ் அப்டேட் !
2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். இவர், இயக்குனர் செல்வராகவன் அவர்களின் தம்பி மற்றும் தயாரிப்பாளர் - இயக்குனர் கஸ்தூரி ராஜா அவர்களின் மகன் ஆவார்.
காதல் கொண்டேன், திருடா திருடி, சுள்ளான், புதுப்பேட்டை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென்ற தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். பொல்லாதவன், ஆடுகளம், 3, வேலையில்லா பட்டதாரி, வடசென்னை, கர்ணன் போன்ற படங்கள் மூலம் செம ஹிட் ஆகிவிட்டார். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்கள் எடுத்துவிட்டார்.
தனது திறமை மூலம் பல விமர்சனங்களையும் தாண்டி பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்து வருகிறார். ஒல்லியாக இருக்கும் இவனெல்லாம் ஹீரோவா என கேலி கிண்டல் பேசியவர்கள் தற்போது இவர் ஹாலிவுட், பாலிவுட் வரை சென்றது பார்த்து விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றிபெற்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார்.
இந்த வருட தொடக்கத்தில் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவுடனான 18 வருட வாழ்க்கையை முடித்துள்ளதாக அறிக்கை வெளியிட்டார். அது அனைவருக்குமே அதிர்ச்சியாக தான் இருந்தது. விவாகரத்து பெற்ற தனுஷ் தனது மகன்களுடன் அவ்வப்போது அதிக நேரம் செலவிட்டு வருகிறார். மீண்டும் இருவரும் சேரப்போவதாக அவ்வப்போது தகவல் வெளியாகி வருகிறது.
சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் பெரும் வெற்றியைபெற்றது. விரைவில், நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. இந்நிலையில், இவர் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
சாணி காகிதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். 1930 - 40 களில் பின்னணியில் எடுக்கப்படும் பீரியாடிக் ஃபிலிம் ஆக இந்த படம் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்படும் கேப்டன் மில்லர் இலங்கைப் போரில் போராளியாக இருந்த வல்லிபுரம் வசந்தன் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. இந்த படத்திற்கான முதல் அறிவிப்பை தனுஷின் பிறந்தநாள் அன்று டீசராக வெளியிட்டு பட குழு அறிவித்து இருந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெருவுள்ளது. தனுஷ், பிரியங்கா மேனன், சந்திப்கிஷன் அனைவரும் கலந்து கொண்டனர். மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகும் இப்படத்தின் மினியேச்சரும் பத்திரிகையாளர்களுக்கு காட்டப்பட்டுள்ளது. படம் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படம் காட்சியாகப்படுவதாகவும் அதற்கான கிராமம் தான் தற்போது மினியேச்சர் ஆக காட்டப்பட்டுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.