பிரியா பவானி ஷங்கரின் முத்த மழையில் எஸ்.ஜே.சூர்யா.. வைரலாகும் பொம்மை பட ட்ரைலர் !

Bommai movie trailer getting viral on social media

மொழி, அபியும் நானும் போன்ற வித்தியாசமான கதைகளை இயக்கிய ராதா மோகன் அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொம்மை. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். மான்ஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, 2வது முறையாக ப்ரியா பவானி ஷங்கர் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்துள்ளார்.

Bommai movie trailer getting viral on social media

இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பொம்மை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் முழுவீச்சில் நடந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இப்படத்தை நடிகர் SJ சூர்யா ஏஞ்ஜல்ஸ் ஸ்டுடியோஸ் (Angel studios MH LLP) நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

Bommai movie trailer getting viral on social media

இந்நிலையில் இப்படத்தின் வித்தியாசமான ட்ரைலர் வீடியோ வெளியாகி உள்ளது. ரொமான்டிக் த்ரில்லர் வகையில் உருவாகி உள்ள இப்படத்தின் ட்ரைலர் வைத்து சிலது நமக்கு புரிய வருகிறது. எஸ்.ஜே சூர்யா சைக்கோவாக நடித்துள்ளார்.

Bommai movie trailer getting viral on social media

ப்ரியா பவானி சங்கர், சூர்யாவின் காதலியாக கற்பனை கதாபாத்திரம் போல இருப்பது போல தெரிகிறது. ஜவுளிக்கடையில் வேலைபார்க்கும் நபராகவும், பொம்மைகள் மீது கற்பனையை உலவ விடும் மனப்பிறழ்வு கொண்டவராக எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார்.

Bommai movie trailer getting viral on social media

பொம்மை என்னும் படம் 1964ம் ஆண்டு எஸ்.பாலச்சந்தர் இயக்கத்தில் வி.எஸ்.ராகவன், எல்.விஜயலக்ஷ்மி ஆகியோர் நடிப்பில் வெளியான கிளாசிக் சஸ்பன்ஸ் த்ரில்லர் படத்தின் தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post