இந்திய சினிமா'ல இப்டி மோசமான படத்த பார்த்ததில்ல.. RRR படத்தை பார்த்த பிரபல நடிகர் Viral Tweet

Bollywood star kamaalrkhan negative review about rrr film

பிரம்மாணட தெலுங்கு பட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான திரைப்படம் RRR. பாகுபலி மற்றும் பாகுபலி 2 வுக்கு பின் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால் ரசிகர்களிடையே தாறுமாறான எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Bollywood star kamaalrkhan negative review about rrr film

இந்த திரைப்படம் இன்று காலை முதல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என 4 மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பிரீமியர் காட்சிகளை பார்த்த பலரும் இப்படம் பற்றிய எண்ணங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Bollywood star kamaalrkhan negative review about rrr film

ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இப்படத்திற்கு பட்டாசுகள் வெடித்தும், கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்தும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

Bollywood star kamaalrkhan negative review about rrr film

சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் வரும் நிலையில், பிரபல இந்தி நடிகரும் விமர்சகருமான கமால் கான் இப்படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Bollywood star kamaalrkhan negative review about rrr film

ஆர்.ஆர்.ஆர் படத்தைப் திரையரங்கில் பார்த்த கே.ஆர்.கே எனும் கமால் ரசித் கான், இதனை மோசமான படம் என டுவிட் செய்துள்ளார்.

Bollywood star kamaalrkhan negative review about rrr film

மேலும் அவர் பதிவிட்டுள்ளதாவது : “இந்தப் படத்தை எடுத்தது தவறு என்று சொல்லமாட்டேன். இது மிகப்பெரிய குற்றம்.. 600 கோடி ரூபாய் செலவில் இப்படி ஒரு மோசமான படத்தை எடுத்த இயக்குனர் ராஜமவுலிக்கு குறைந்தது 6 மாதமாவது சிறை தண்டனை வழங்க வேண்டும்” என சாடியுள்ளார்

Bollywood star kamaalrkhan negative review about rrr film

“இந்திய சினிமா வரலாற்றில் இப்படி ஒரு மோசமான படத்தை பார்த்ததில்லை. ராஜமவுலி சார் என் உணர்ச்சிகளை கொன்றுவிட்டீர்கள். என் அறிவு எல்லாம் இன்று பூஜ்ஜியமாகிவிட்டது. இந்தியாவில் எடுக்கப்பட்ட மிக மோசமான படம் இது” என நடிகர் கமால் கான் விமர்சித்து உள்ளார். அவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share this post