ஒரு பெண் - 4 ஆண்கள்.. பாடி ஸ்ப்ரே விளம்பரத்தில இவ்ளோ ஆபாசமா ! நீக்கப்பட்ட வீடியோ !

Body spray advertisement has been removed after sexual content

தனியார் நிறுவனத்தின் பாடி ஸ்பிரே விளம்பரம் ஒன்று பெண்ணை இழிவாகவும், பாலியல் வன்முறையை தூண்டும் விதமாகவும் இருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில், அதனை நீக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Body spray advertisement has been removed after sexual content

அந்த விளம்பரத்தில், ஒரு சூப்பர் மார்கெட்டில், பெண் ஒருவர் ட்ராலியுடன் செல்ல, அவரின் பின்னால் நிற்கும் 4 இளைஞர்களில் ஒருவர் ‘நாம 4 பேரு. ஆனா ஒண்ணு தான் இருக்கு.. அது யாருக்கு..” என இரட்டை அர்த்தத்துடன் கேட்கிறார். அந்தப் பெண் அதிர்ச்சியாக திரும்புகிறார். அப்போது அந்த 4 இளைஞர்களும் ஒரு பாடி ஸ்பிரேயைப் பற்றி பேசியதாக காட்டுகின்றனர்.

Body spray advertisement has been removed after sexual content

மற்றொரு விளம்பரத்தில், வீட்டின் படுக்கை அறையில், ஒரு பெண்ணும், பையனும் அருகருகே அமர்ந்திருக்க திடீரென கதவைத் திறந்து உள்ளே 4 இளைஞர்கள் நுழைகின்றனர். அது எங்களுக்கு வேணும் என கேட்க, அந்தப் பெண் திகைத்துப் போகிறார். பின்னர், டேபிளில் உள்ள பாடி ஸ்பிரேயை எடுத்துக் செல்கின்றனர்.

Body spray advertisement has been removed after sexual content

சமூக வலைதளங்களில் வெளியான இந்த விளம்பரத்துக்கு மக்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து இந்த விளம்பரத்தை நீக்கக் கோரி தொடர்ந்து எதிர்ப்பு குரல்களும் எழுந்து வந்தன. பிரபலங்கள் பலரும் இந்த விளம்பரத்துக்கு எதிராக குரல் கொடுத்ததை அடுத்து யூடியூப், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து அந்த விளம்பரங்களை நீக்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து அந்த விளம்பரம் நீக்கப்பட்டுள்ளது.

Share this post