‘இதெல்லாம் ஒரு பொழப்பா?’ சிறந்த நடிகர்'னு விருதை இப்டி தான் விஜய் சேதுபதி வாங்கினார்.. கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்.
பெரிய பிரபலங்கள் படத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர், பீஸ்சா, நானும் ரவுடி தான், இமைக்கா நொடிகள் போன்ற பல திரைப்படங்களில் மக்களை ஈர்க்கும் கதையில் பிடித்தமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆகி, தற்போது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் மக்கள் செல்வனாக உருவாகியுள்ளார்.
எந்த விதமான கதைகளிலும் தயக்கம் காட்டாது நடித்து வரும் விஜய் சேதுபதி, இவர் நடிக்கும் முக்கால்வாசி திரைப்படங்கள் வெற்றி படங்களாகவே அமைந்து விடுகிறது. தற்போது, 2 ஹீரோ சப்ஜெக்டிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், விக்ரம் வேதா, பேட்ட, மாஸ்டர்,மேலும், தற்போது வெளியாகி வேற லெவல் மாஸ் காட்டி வரும் விக்ரம் படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து கெத்து காட்டி வருகிறார்.
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் 2 பெரிய ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்த விஜய் சேதுபதி, விக்ரம் படத்தில் சந்தானம் என்ற போதை கடத்தல் ஏஜண்ட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. தற்போது, சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் திரைப்படத்தில் நடித்து அப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது.
தற்போது, விடுதலை, காந்தி டாக்ஸ், ஹிந்தியில் ஜவான் உள்ளிட்ட திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். ஹீரோவாக மட்டுமே நடிக்காமல், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என முன்னணி நடிகர்கள் படங்களில் தலைகாட்டி வருகிறார். சமீபத்தில், விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாகி இருக்கும் டிஎஸ்பி திரைப்படம் மிக மோசமாக விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில், சென்னையில் கடந்த 15ம் தேதி தொடங்கி சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. அந்த விழாவில் பல திரைப்படங்கள் வெளியிடப்பட்டன மேலும் விழாவின் முடிவில் சினிமா கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் “மாமனிதன்” படத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருதும், கார்கி படத்தில் நடித்ததற்காக சாய் பல்லவிக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், விஜய் சேதுபதி சிறந்த நடிகருக்கான விருதை வாங்கியது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் விமர்ச்சிருந்தார். அந்த பதிவில் `சென்னை சர்வதேச திரைப்பட விழா நடக்கும் சத்யம் தியேட்டரில் ஒருவாரமாக குட்டிபோட்ட பூனை போல சுற்றி. விழாக்கமிட்டி, ஜுரி, அமைச்சர் என அனைவரையும் நச்சரித்து சிறந்த நடிகர் விருதை வாங்கிவிட்டார் விருது வெறியர்.
‘இதெல்லாம் ஒரு பொழப்பா?’ என்று பலரும் புளிச்சென துப்பி வருகிறார்கள். ப்ளூ சட்டை மாறன் போட்டிருந்த இந்த ட்விட் பதிவு வைரலாகவே விஜய் சேதுபதியை இப்படி விமர்ச்சித்த மாறனை பலர் கடுமையாக திட்டி ட்விட் செய்து வருகின்றனர். மேலும் சென்னைக்கு “கென்னை” என்று ப்ளூ சட்டை மாறன் போட்டிருந்த வார்த்தியை சுட்டி காட்டி கலாய்த்தும் வருகின்றனர் விஜய் சேதுபதி ரசிகர்கள்.