'என்னைய சொல்லிட்டு இவரு இதெல்லாம் பண்ணுவாராம்..' சிம்புவை விமர்சித்து வரிசையாக பதிவிட்ட ப்ளூ சட்டை !
சினிமா விமர்சகர் என்ற பெயரில் டாப் நடிகர்கள், இயக்குனர்கள் என அவர்கள் பணியாற்றும் திரைப்படங்கள், செயல்கள் அனைத்தையும் வம்பிழுப்பத்து சர்ச்சை கிளப்பி வருபவர் ப்ளூ சட்டை மாறன். டாப் நடிகர்கள் நடித்த படம் முதல் லோ பட்ஜெட் திரைப்படங்கள் வரை அனைத்தையும் விமர்சித்து வீடியோ பதிவிட்டு ட்ரெண்ட் ஆவது இவரது வழக்கம்.
அப்படி நேற்று சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தை ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார். படத்தை பற்றி மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார். வீணா போனவன் டான் ஆன கதைனு சொல்லி விமர்சித்து இருந்தார். மேலும், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் ஜாபரை பற்றி உருவ கேலி செய்திருந்தார்.
அதுமட்டுமின்றி, கவுதம் மேனன், படம் ரிலீஸ் ஆவதற்கு முந்தைய நாள், படம் பார்க்க வருபவர்கள் நன்கு தூங்கிவிட்டு வாருங்கள் என கூறி இருந்தார். அவர் அப்படி சொல்லும் போதே கருகுற வாடை அடித்ததாக கிண்டலடித்து இருந்தார் ப்ளூ சட்டை, அதுமட்டுமின்றி கவுதம் மேனனை வாய்ஸ் ஓவர் பைத்தியம் என்றும் தரக்குறைவாக பேசி இருந்தார். இதற்கு நெட்டிசன்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ப்ளூ சட்டை மாறனின் இந்த விமர்சனத்திற்கு சென்னையில் நேற்று நடந்த சக்சஸ் மீட்டில் இயக்குனர் கவுதம் மேனன் மற்றும் நடிகர் சிம்பு ஆகியோர் பதிலடி கொடுத்தனர். இன்னொருத்தர் பொழப்புல மண்ணு போடுறது தான் விமர்சனங்களா என தான் பலமுறை யோசித்தது உண்டு என இயக்குனர் கவுதம் மேனன் பேச, சிம்பு உருவகேலி குறித்து பேசினார்.
மேலும் சிம்பு கூறியதாவது : “வெந்து தணிந்தது காடு படத்துல என்னோட உடம்ப வச்சு விமர்சகர்களால் எதுவும் எழுத முடியல. ஒரு படத்தை விமர்சனம் பண்லாம், தனிப்பட்ட மனிதனையும், அவனுடைய உருவத்தையும் விமர்சனம் பண்றது ரொம்ப தப்பு.
என்னால எடுத்துக்க முடியும் நிறைய பேரால எடுத்துக்க முடியாது. தனிப்பட்ட முறையில் யாரையும் துன்புறுத்த வேண்டாம். இதை நான் வேண்டுகோளா வச்சிக்கிறேன். இவ்வாறு ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகர் சிம்பு பேசியுள்ள வீடியோ வைரலாகி வந்தது.
அதற்கு ப்ளூ சட்டை மாறன் அவர்கள் சிம்புவின் பழைய பாடல் வரிகள் ஒன்றை உதாரணம் காட்டி “இதுதான் பெண்களை மதிக்கும் லட்சணமா” என்று பதிலடி கொடுத்திருக்கிறார். அதனைப் பார்த்த சூடான சிம்பு ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனின் பதிவிற்கு கண்டபடி திட்டி வறுத்தெடுத்து வருகின்றனர்.