சுள்ளான்களை யார் வந்து சுளுக்கெடுக்க போறாங்களோ… தனுஷ் ரசிகர்களை எச்சரித்த ப்ளூ சட்டை..!

blue-sattai-maran-tweet-about-dhanush-and-his-fans-details-here

கோலிவுட்டின் எந்த பக்கம் திரும்பினாலும் பரபரப்பாக பேசப்படும் ஹாட் டாபிக்காக இருப்பது தனுஷின் ஐம்பதாவது படத்தினை தானே எழுதி, இயக்கி நடித்தும் உள்ளது குறித்து தான் பேசப்பட்டு வருகிறது. ஐம்பதாவது படமான ராயன் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள வரவேற்பினால் தனுஷ் தற்போது, கோவில் கோவிலாக சென்று வழிபாடு செய்து வருகிறார்.

மேலும், ராயன் படம் ஒருபக்கம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்க தயாரிப்பாளர் சங்கம் தனுஷ் மீது மிகப்பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. முன்னதாக தன்னைச் சுற்றி மகிழ்ச்சியான விஷயங்களும் பிரச்சனைகளும் சர்ச்சைகளும் நிறைந்து காணப்படுவதால் இன்றைக்கும் தமிழ் சினிமாவின் ஹாட் டாபிக் ஆப் தி நியூசாகவே தனுஷ் மாறிவிட்டார்.

முன்னதாக ராயன் படம் வெளியானதில் இருந்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் படம் தொடர்பாகவும், தனுஷ் தொடர்பாகவும் தொடர்ந்து ஏதாவது பதிவிட்டு கொண்டே வருகின்றார். இந்நிலையில், தனுஷ் கடந்த 28ஆம் தேதி தனது 41வது பிறந்த நாளை கொண்டாடினார்.

blue-sattai-maran-tweet-about-dhanush-and-his-fans-details-here

தனுஷை பார்ப்பதற்காக அவருக்கு பிறந்தநாள் பரிசு கொடுக்க ரசிகர்கள் போயஸ் கார்டன் வீட்டில் முன்பு திரண்டார்கள். தன்னை ரசிகர்கள் பார்க்க வந்துள்ளதை அறிந்த தனுஷ் அவர்களை பார்க்க வீட்டில் இருந்து வெளியே வந்தார்.

மேலும், ரசிகர்களை நோக்கி கைய அசைத்தார். இதனை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர். இந்நிலையில், தனுஷின் ரசிகர் ஒருவர் பரிசு கொடுக்க முன் வந்தார். ரசிகரை அங்கிருந்த பவுன்சர் தடுக்க தனுஷ் ரசிகரை நோக்கி முன்னே வந்து பரிசை பெற்றார்.

blue-sattai-maran-tweet-about-dhanush-and-his-fans-details-here

இந்நிலையில், தனுஷ் புதிதாக வாங்கியுள்ள போயஸ் கார்டன் வீட்டின் முன் ரசிகர்கள் கூடியிருந்தது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பொங்கலுக்கு தலைவரை பார்க்க வந்த ரசிகர்கள் பக்கத்து வீட்டு மேடம் கஷ்டப்பட்டு போட்ட கோலத்தை கலைத்துவிட்டு சத்தம் போட்டு பிரச்சனை பண்ணாங்க.. அந்த அம்மா வெளியே வந்து எல்லாத்தையும் வெளுத்து விட்டுட்டாங்க… அடுத்தது, சுள்ளான்களை எந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் சுளுக்கு எடுக்க போறாங்களோ என்று பதிவிட்டுள்ளார்.

Share this post