10 ரூபா பரோட்டாவால் பேமஸான சூரி-யா இது.. 10 கோடி ரூபாய் ஸ்விஸ் வாட்ச்.. 100 கோடி பங்களா..!
தமிழ் சினிமாவில் கூட்டத்தில் ஒருவராக காமெடி காட்சியில் தலைகாட்டியவர் நடிகர் சூரி. மதுரையை சொந்த ஊராக கொண்டு கிராமத்தானாக பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு 2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அறியப்படுகிறார். 1997முதல் தற்போது வரை 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
காமெடி நடிகராக நடித்து இன்று ஹீரோவாக கோடிகளில் சம்பளம் வாங்குபவராக சூரி உயர்ந்திருக்கிறார். அதற்காக அவர் மிகவும் உழைத்து தான் இந்த இடத்தை பிடித்துள்ளார். ஆம், தனது உடலை கட்டுமஸ்தான தோற்றத்தில் வைக்க எப்போதும் உடற்பயிற்சி, ஒர்க் அவுட் என கடைபிடித்து ஹீரோவுக்கான தோற்றத்தையும், உடல் அமைப்பையும் வரவைத்துக்கொண்டார். அவரது transformation பல டாப் நடிகர்களையே பிரம்மிக்க செய்தது.
சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். மற்ற எந்த காமெடி நடிகர்களும் இந்த அளவிற்கு உயர்ந்ததில்லை என கோலிவுட்டில் பேசப்படுகிறார். அடுத்ததாக ராம் இயக்கத்தில் “ஏழு கடல் ஏழுமலை”, துரை செந்தில் குமார் இயக்கத்தில் கருடன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து உள்ளார். இதில், கருடன் படத்தில் நடிக்க சூரி ரூ. 8 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம். ஆரம்பத்தில் ரூ.5க்கும் ரூ.10க்கும் கஷ்டப்பட்டு கூட்டத்தில் ஒருவராக நடித்து வந்த சூரி இன்று இந்த அளவிற்கு தன் சொந்த முயற்சியால் வளர்ந்திருப்பதை கோலிவுட் திரையுலகம் பிரம்மித்து பேசுகிறது.
இந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொடுக்காளி, விடுதலை 2, டி அடமண்ட் கேர்ள் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு புதிய ஹேர் ஸ்டைல் உடன் அமெரிக்காவின் ஒரு சிட்டியில் ஒரு பிரம்மாண்ட பங்களாவில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இதனை பார்த்து பலர் ஷாக்கிங் ரியாக்ஷன் கொடுத்திருந்த நிலையில், கலாய்த்தபடி ஒரு மீம்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், 10 கோடி ரூபாய் ஸ்விஸ் வாட்ச், வாஷிங்டன் புதிய பங்களா குறுகிய காலத்தில் சூப்பர் ஸ்டார் ஆன சூரி என்று கூறி விமர்சித்திருந்தார். இதனைப் பார்த்து நெட்டிசக்கள் அதுக்கு என்ன அவர் உழைப்பில் முன்னேற்றம் அடைகிறார் என்று பதிலடி கொடுத்து வருகிறார்கள்.