சிபாரிசு மூலம் தேசிய விருதா..? ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட ஆதாரம்.. அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கும் ரசிகர்கள் !
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு சிலரில் ஒருவர் நடிகர் சூர்யா. நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்த சூர்யாவிற்கு, ஆரம்ப காலத்தில் பெரிய படங்கள் ஏதும் ஹிட் ஆகாத நிலையில், காக்க காக்க, பிதாமகன், நந்தா, மௌனம் பேசியதே, 7ம் அறிவு போன்ற படங்கள் மூலம் செம பிரபலம் ஆனார்.
மேலும், இவரது நற்குணங்கள் காரணமாக மக்கள் இடையில் இவருக்கு நல்ல பெயரும் உள்ளது. கடந்த வருடம் வெளியான ஜெய் பீம் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து இவரது நடிப்பு கொண்டாடப்பட்டது.
இதன் பின்னர், சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து, தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் 41வது படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன், சுதா கொங்கரா என அடுத்தடுத்த படங்களில் சூர்யா ஒப்பந்தமாகி உள்ளார்.
இதன் நடுவே, சர்ப்ரைஸாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் எதிர்பாராத விதமாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவின் ரோலெக்ஸ் கதாபாத்திரம் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில், 68-வது தேசிய திரைப்பட விருது அறிவிப்பு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் 2020ம் ஆண்டு வெளியான படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் இந்தியா முழுவதிலும் இருந்து 295 திரைப்படங்கள் இந்த விருதுக்கு அனுப்பப்பட்டிருந்தன. அதில் இருந்து 66 திரைப்படங்களும், 140க்கும் மேற்பட்ட டாக்குமெண்டரி படங்களையும் ஜூரி மெம்பர்கள் பார்த்தனர்.
சிறந்த நடிகருக்கான தேசிய விருது சூரரை போற்று படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நடிகர் சூர்யா தேசிய விருதை வெல்வது இதுவே முதன்முறை ஆகும். 2020ம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், காளி வெங்கட், ஊர்வசி, கேகே, விவேக் பிரசன்னா நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. பெரிய எதிர்பார்பிற்கு இடையே நேரடியாக OTT-யில் வெளியான சூரரை போற்று, மக்களிடையே பேரதரவை பெற்றது.
மேலும் சிறந்த விமர்சனங்களை பெற்ற இப்படத்தில் நடிகர் சூர்யா தனது சிறப்பாக நடித்திருந்தார். இப்படம் குறிப்பாக இளைஞர்களை பெரிதும் கவர்ந்தது. இப்படத்திற்கு பல விருதுகள் கிடைக்கும் என பலரும் இப்படம் வெளியானது முதலே விமர்சனம் தெரிவித்து வந்தனர்.
தற்போது 68வது தேசிய விருது பட்டியலில் சூரரை போற்று படத்திற்கு சிறந்த நடிகர், நடிகை, திரைப்படம், திரைக்கதை, பின்னணி இசை என 5 விருதுகளை குவித்தது. சிறந்த நடிகராக சூர்யாவும், சிறந்த நடிகையாக அபர்ணா பாலமுரளியும், சிறந்த பின்னணி இசைக்காக ஜிவி பிரகாஷும், சிறந்த திரைக்கதைக்காக சுதா கொங்கராவும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர சிறந்த படத்துக்கான விருதையும் சூரரைப் போற்று தட்டித்தூக்கி உள்ளது.
தேசிய விருது வென்ற சூர்யாவுக்கும், சூரரைப் போற்று படக்குழுவுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், சர்ச்சைக்குரிய விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், சூர்யாவுக்கு தேசிய விருது கிடைத்ததன் பின்னணியில் சில சிபாரிசுகள், அரசியல் நடந்துள்ளதாக பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
அதாவது, தேசிய திரைப்பட விருது குழுவில் சூர்யாவின் மேனேஜர் தங்கதுரை என்பவர் இடம்பெற்று இருந்ததாகவும். அவரால் தான் சூர்யாவுக்கு விருது கிடைத்தது என்பது போல இருந்த பதிவை குறிப்பிட்டு “மிஸ்டர் சூர்யா… உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்” என கேட்டுள்ளார்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் ப்ளூ சட்டை மாறனிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு பதிவிட்டு வருகின்றனர். அந்த தங்கதுரை, சூர்யா மட்டுமல்ல தமன்னா, இயக்குனர் ஷங்கர் போன்றவர்களுக்கும் தான் மேனேஜராக இருக்கிறார். அப்படி பார்த்தால் அவர்களுக்கும் தேசிய விருது கிடைச்சிருக்கனும்ல என பதிலடி கொடுத்து வருகின்றனர்.