'இறங்கி என்ன செய்ய போறீங்க..' லிஸ்ட் போட்டு கெளதம் மேனனை கலாய்த்த ப்ளூ சட்டை.. வைரலாகும் பதிவு!
காதல் திரைப்படங்கள் என்றாலே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருபவர் இயக்குனர் கவுதம் மேனன். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் பணியாற்றியுள்ளார். மின்னலே, வாரணம் ஆயிரம் தொடர்ந்து 2010ம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் இவருக்கு பெரும் அங்கீகாரத்தை பெற்றுத்தந்து இளசுகளின் பேவரைட் இயக்குனராக மாறிவிட்டார்.
வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், நீதானே எந்தன் பொன்வசந்தம், என்னை அறிந்தால், என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற பிரபல வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு.
வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேசன் தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக சிந்து இதானி, மேலும், நடிகை ராதிகா சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக படத்தின் இயக்குனர் கவுதம் மேனன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். முதல் பாகம் ரிலீசாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, சிம்பு மற்றும் கவுதம் மேனன் பல பேட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.
அப்படி ஒரு பேட்டியில், ப்ளூ சட்டை மாறனை கடுமையாக விமர்சித்து இறங்கி ஏதாவது செய்யலாமாங்குற அளவுக்கு கோபம் வருது’ என கவுதம் மேனன் பேசியுள்ள வீடியோ செம வைரலாகி வந்தது.
கெளதம் மேனனின் இந்த விமர்சனத்திற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்து வரும் ப்ளூ சட்டை மாறன். கெளதம் மேனனனையும் வெந்து தணிந்தது காடு படத்தையும் கேலி செய்து வருகிறார்.
மேலும், அவரது பெயரில் இருக்கும் மேனன் என்ற சாதிப்பெயரை குறிப்பிட்டு விமர்சித்து வரும் ப்ளூ சட்டை ”கெளதம் மேனன் இயக்கிய முதல் படமான மின்னலே பட போஸ்டரை பதிவிட்டு அதில் கெளதம் மேனனின் பெயர் கெளதம் என்று குறிப்பிட்டு இருப்பதை சுட்டிகாட்டி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் கெளதம் என்ற பெயருடன் நுழைந்துவிட்டு பின்னர் மேல் சாதி பெயரான மேனன் என்ற சாதி பெயரை போட்டுகொண்டு தன்னை உயர்த்திக்கொண்டார். சாதிப்பெயரை பெயரை போட்டுக்கொள்வதை விரும்பாத தமிழகத்தில்..சாதிய அடையாளத்தை பெருமையாக கருதும் ஒரே இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் என்று ஜாதியை குறிப்பிட்டு விமர்சித்து இருக்கிறார்.
ப்ளூ சட்டை மாறனை @tamiltalkies
— Name (@YourNanban) September 20, 2022
இறங்கி செய்ய போகும் @menongautham pic.twitter.com/NUJUa7SZaH