Viral Video: நடிகர் ஜாபரை மோசமாக விமர்சித்த ப்ளூசட்டை மாறன்.. இப்டியா பேசுறது.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !
சினிமா விமர்சகர் என்ற பெயரில் டாப் நடிகர்கள், இயக்குனர்கள் என அவர்கள் பணியாற்றும் திரைப்படங்கள், செயல்கள் அனைத்தையும் வம்பிழுப்பத்து சர்ச்சை கிளப்பி வருபவர் ப்ளூ சட்டை மாறன்.
டாப் நடிகர்கள் நடித்த படம் முதல் லோ பட்ஜெட் திரைப்படங்கள் வரை அனைத்தையும் விமர்சித்து வீடியோ பதிவிட்டு ட்ரெண்ட் ஆவது இவரது வழக்கம்.
அப்படி நேற்று சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தை ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார். படத்தை பற்றி நன்றாக விமர்சனம் கூறியுள்ள இவர், படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் ஜாபரை பற்றி தவறாக விமர்சனம் செய்துள்ளார்.
ப்ளூ சட்டை மாறன் பேசுகையில் ‘விக்ரம் படத்தில் வருவாரே குட்டியா லில்லிபுட் மாதிரி, Mini Quarter மாதிரி ‘ என்று நடிகர் ஜாபரை அடையாளப்படுத்தியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ப்ளூ சட்டை மாறன் இன்னும் திருந்தேவே இல்லையா என்று கூறிய கடுமையாக தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.
ஒரு படத்தை விமர்சனம் செய்வது சரி, ஆனால் ஒருவரது உருவத்தை கிண்டலாக ஆடையாளம் காட்டி பேசுவது மிகவும் தவறு, இனிமேலாவது இதை செய்யாதீர்கள் என்று பலரும் கூறி வருகின்றனர்.