சினிமாவில் அடியெடுத்து வைக்கும் பாஜக அண்ணாமலை.. வைரலாகும் போஸ்டர் !

Bjp annamalai to act in movie poster getting viral

1984ம் ஆண்டு கரூரில் பிறந்த அண்ணாமலை, 2011ம் ஆண்டு ஐபிஎஸ் படிப்பில் தேர்ச்சி பெற்று பதவி ஏற்றார்.

திடீரென 2019ம் ஆண்டு, தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, 2020ம் ஆண்டு பாஜக கட்சியில் இணைந்தார்.

Bjp annamalai to act in movie poster getting viral

ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்ற பிறகு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த அண்ணாமலை., இரண்டு வருடங்களில் தற்போது தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய நபராக வளர்ந்திருக்கிறார்.

அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அண்ணாமலை, தற்போது சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி உள்ளார்.

Bjp annamalai to act in movie poster getting viral

அதன்படி அவர் அரபி என்கிற கன்னட படத்தில் நடித்துள்ளார்.

இரு கைகளும் இல்லாமல் சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு சாதனைகளை படைத்த விஸ்வாஸ் என்கிற நீச்சல் வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது.

Bjp annamalai to act in movie poster getting viral

இப்படத்தில் விஸ்வாஸின் பயிற்சியாளராக அண்ணாமலை நடித்துள்ளாராம். முதலில் இப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டாத அண்ணாமலை, இயக்குனரிடம் கதை கேட்டதும், மிகவும் பிடித்துப்போனதால் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

படப்பிடிப்பு முடிந்ந்து ரிலீசுக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

Bjp annamalai to act in movie poster getting viral

இந்நிலையில், இப்படத்தின் டீசர் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் நடித்ததற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின் சினிமாவை விட்டு விலகும் சமயத்தில் அண்ணாமலை நடிகராக எண்ட்ரி கொடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

Bjp annamalai to act in movie poster getting viral

Share this post