விஜய்யை கலாய்ப்பது போல சீன்-ஆ ? KRK படத்துல இப்டி பண்ணிட்டிங்களே ! கோபத்தில் விஜய் ரசிகர்கள்..

Bigil scene has been recreated in krk movie vijay fans angry

போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலம் ஆனவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஒன்று சேர்ந்து முக்கோண காதல் கதை வடிவில் உருவாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Bigil scene has been recreated in krk movie vijay fans angry

இப்படத்தில் இருந்து வெளியான 2 2 2, நான் பிழை உள்ளிட்ட பாடல்கள் இளசுகளின் ரிங்டோனாக மாறியுள்ளது. இதில் khatija வாக சமந்தா, கண்மணியாக நயன், மற்றும் ராம்போ வாக விஜய் சேதுபதி நடித்துள்ளனர். R’anjankudi A’nbarasu M’urugesa B’oopathy O’hoondhiran என்பதின் சுருக்கமே ராம்போ.

Bigil scene has been recreated in krk movie vijay fans angry

இன்று ஏப்ரல் 28ம் தேதி இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. காதல், செண்டிமெண்ட், டைலாக் டெலிவரி, பாசம், நகைச்சுவை என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார். முகம் சுளிக்கும் அளவிற்கு காட்சிகள் எதுவும் வைக்காமல், அழகாக மூவரின் காதல் கதையை கையாண்டுள்ளார்.

Bigil scene has been recreated in krk movie vijay fans angry

இந்நிலையில், விஜய் ரசிகர்கள் இப்படத்தை விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். என்ன காரணம் என பார்த்தால், இப்படத்தில் ஒரு காட்சியில் விஜய்யின் பிகில் பட முக்கிய காட்சியை ரீ-கிரியேட் செய்துள்ளனர். அதில் ரெடின் கிங்ஸ்லி விஜய்யை போல வசனம் பேசி நடித்துள்ளார்.

Bigil scene has been recreated in krk movie vijay fans angry

படத்திலே மிக emotional ஆன இந்த காட்சியை விக்னேஷ் சிவன் இப்படி செய்திருக்க கூடாது என கோபம் கொண்டு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Share this post