ஆரம்பிக்கலாங்களா.. வெளியான பிக்பாஸ் சீசன் 6 லேட்டஸ்ட் அப்டேட்..

Biggboss tamil season 6 update getting viral on social media

நெதர்லாந் நாட்டின் ‘பிக் பிரதர்’ நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியானது இந்தியாவில் முதலில் ஹிந்தியில் அறிமுகம் செய்யப்பட்டது.

Biggboss tamil season 6 update getting viral on social media

அதனை தொடர்ந்து, தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் என்று பல மொழிகளில் நடத்தப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 6 சீசன் முடிந்துள்ளது.

Biggboss tamil season 6 update getting viral on social media

இந்நிலையில் ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியை கமல் 3 வாரமும், மீதம் சிம்பு அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது. இதையடுத்து, அடுத்த சீசன் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. OTT தள 24 மணி நேர ஷோவில் 5 சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் சிலர் பங்கேற்றனர்.

Biggboss tamil season 6 update getting viral on social media

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை முதல் 3 வாரம் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், அரசியல், ஷூட்டிங் என பிசியாக இருப்பதால் விலகுவதாக கமல் கூறி விட்டு விலகவே, சிம்பு மீதமிருந்த வாரங்கள் தொகுத்து வழங்கினார். இதனால், இனி, கமல் ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டார் என பேசப்பட்டது.

Biggboss tamil season 6 update getting viral on social media

ஆனால், யாரும் எதிர்பார்த்திராத நிலையில், விக்ரம் படத்திற்கு பிறகு கமல், விரைவில் பிக்பாஸ் சீசன் 6ல் அனைவரையும் சந்திப்பதாகவும் அறிக்கை வெளியிட்டார். தற்போது விக்ரம் படமும் ரிலீசாகி சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றது. உலகம் முழுவதும் 350 கோடிக்கும் மேல் வசூல் செய்து, கோலிவுட்டில் புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளது. இதையடுத்து, அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமல் கமிட்டாகி வருகிறார்.

Biggboss tamil season 6 update getting viral on social media

இந்த சமயத்தில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி பற்றிய புதிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜுன் மாத இறுதியில் துவங்கி அக்டோபர் மாதத்தில் முடிவடையும்.

Biggboss tamil season 6 update getting viral on social media

லேட்டஸ்ட் தகவலின் படி, வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கப்பட உள்ளது. இதையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க போகிறார். இதற்கான, போட்டியாளர்கள் தேர்வு விரைவில் துவங்கப்பட உள்ளதாக அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

Share this post