சர்ச்சைக்கு முடிவுக்கட்டும் இந்த சீசனின் முதல் குறும்படம்.. இதோ வைரலாகும் வீடியோ !
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, கானா பாடகர் அசல் கோலார், திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, மெட்டி ஒலி சாந்தி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சண்டைக்கு கொஞ்சம் கூட குறைச்சல் இல்லாமல் அரங்கேறி வருகிறது. தனலட்சுமி, அசீம், விக்ரமன் உள்ளிட்டோர் பெயர் எப்படியாவது வெளியே வந்து விடுகிறது. அப்படி தற்போது, அசீம் மீது தனலட்சுமி கொந்தளித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடைபெற்று வரும் பொம்மை டாஸ்க்கில் இரண்டு குழுவினராக பிரிந்து ஒருவருக்கொருவர் மோதி வருகின்றனர்.
இன்று காலை வெளியான ப்ரோமோ வீடியோவில் தனலட்சுமி மிகவும் வைலண்ட் ஆக விளையாடுகிறார் என்று அசீம் குற்றம் சாட்டினார். நீயும் ஒரு பெண்தானே இப்படி போட்டியாளர்களை தள்ளி விடலாமா என ஆத்திரமாக கேட்டார். ஆனால் தனலட்சுமி தான் யாரையும் தள்ளிவிடவில்லை என்றும் குறும்படம் வேண்டுமானால் போடட்டும். என் மீது தவறு என்றால் நான் அனைவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் அதில் நான் தவறு செய்யவில்லை என தெரியவந்தால் என்னிடம் என்னை குற்றம் சாட்டிய எல்லோரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், நெட்டிசன்கள் தற்போது இந்த டாஸ்க்கின் வீடியோவை வெளியிட்டு தவறு யார் மேல் என்பதை சுட்டிக் காட்டியுள்ளனர். இந்த வீடியோவில் ஷெரின் மற்றும் தனலட்சுமி ஆகிய இருவருமே ஒரே நேரத்தில் தள்ளிவிடப்படுகிறார்கள். ஆனால் தனலட்சுமி உடனே எழுந்து மீண்டும் தனது முயற்சியை தொடர்கிறார். ஆனால் ஷெரின் தலையில் காயம் அடைந்ததை போல் இருக்க உடனே மற்ற போட்டியாளர்கள் அவரிடம் என்ன ஆச்சு என கேட்கின்றனர். இதன்பின்னர் தான் அசீமுக்கும் தனலட்சுமிக்கும் சண்டை வருகிறது.
ஆனால் உண்மையில் அந்த வீடியோவில் ஷெரின் கீழே விழுந்தவுடன் அவருடைய தலை தரையில் படவில்லை என்பது இருந்து தெரிய வருகிறது. அவர் கீழே விழுந்தவுடன் கையை ஊன்றி எழுந்திருக்கவும் முயல்கிறார். அதனால் அவருக்கு காயம் பட வாய்ப்பில்லை. ஆனால் அவர் ஏன் காயம் அடைந்தது போல் நடித்தார் என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது. விக்ரமன் உள்பட ஒருசிலர் ஷெரின் கீழே விழுந்தாலும் அவர் தலை தரையில் படவில்லை என்று பார்த்ததாகவும் கூறினர்.
இந்த டாஸ்க்கின் சாரம்சமே பிசிக்கலாக யார் பலமுடையவர் என்பதுதான். அதை புரிந்து கொண்டு தான் அனைவரும் இந்த டாஸ்க்கில் பங்கேற்கின்றனர். ஒருசிலர் இந்த டாஸ்க்கின் தன்மையை புரிந்து கொண்டு விலகியும் உள்ளனர். ஆனால் டாஸ்க்கில் இருந்தும் விலகாமல் டாஸ்க்கையும் தொடர்ந்து கொண்டு மற்றவர் மேல் பழி கூறி காயம் அடைந்தது போல் நடிப்பது முறையான விளையாட்டா? என்பதே நெட்டிசன்களின் கேள்வியாக உள்ளது.
மேலும் இந்த டாஸ்கின்போது அசீம் மிகவும் முரட்டுத்தனமாக ஷிவினின் கழுத்தில் கைவைத்து அவரை பலமாக தள்ளுகிறார். ஒரு பெண் என்றும் பாராமல் மனிதநேயமின்றி நடந்து கொண்ட அசீம் குறித்து கமல் கேள்வி எழுப்புவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மொத்தத்தில் இந்த சீசனின் முதல் குறும்படமாக இந்த வீடியோவை கமல் காண்பித்து, உண்மையாகவே தள்ளிவிட்டது யார்? ஷெரின் காயம் அடைந்தது உண்மையா? அசீம், தனலட்சுமி சண்டையில் யார் மீது தவறு? என்பதை இவ்வார சனிக்கிழமை குறும்படம் மூலம் கமல் தீர்ப்பளிப்பார் என்று நம்புவோம்.
Dhanalakshm narration of the incidence #BiggBoss6 #BiggBossTamil6 #BiggBossTamil pic.twitter.com/rUYm45VNoq
— BIGG BOX TROLL (@drkuttysiva) October 26, 2022
😳😳😳#BiggBossTamil6 #BiggBossTamil #BiggBoss pic.twitter.com/7cOSCV5w6U
— BIGG BOX TROLL (@drkuttysiva) October 26, 2022
Okay even though sherina is acting atleast for the courtesy they can see whether she is okay or not.
— BIGGBOSS VIDEOS (@BIGGBOSS_VIDEOS) October 26, 2022
It's show her pure vengeance of #Dhanalakshmi
And #Shivin is losing her respect #BiggBossTamil #BiggBossTamil6#BiggBoss pic.twitter.com/5kc92gHDwv