Thalapathy66'ல் இணைந்த தமிழ் பிக்பாஸ் பிரபலம்.. இத நாங்க எதிர்பாக்கலயே ! போட்டோவுடன் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு

Biggboss tamil fame actress samyuktha shan to join thalapathy66 crew

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தாலும், ரசிகர்கள் நடுவே நல்ல வசூல் பெற்றது. இப்படம் தியேட்டரில் ரெஸ்பான்ஸ் குறையவே, தற்போது OTTயில் வெளியாகவுள்ளது.

Biggboss tamil fame actress samyuktha shan to join thalapathy66 crew

இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தளபதி66. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் தளபதி66. இப்படத்தில், விஜய் உடன் சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்டோர் நடிப்பதாக அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியானது.

மேலும், முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இப்படத்தின் ஷூட்டிங்காக விஜய் ஹைதராபாத் செல்லும் ஏர்போர்ட் வீடியோ ஒன்று வைரல் ஆனது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் செய்யவுள்ளதாக தகவல் வந்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த வாரம், இப்படத்தில் நடிகர் பிரபு மற்றும் பிரகாஷ் ராஜ் இணைவதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டது. அந்த அறிவிப்பில், இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாக சொல்லப்பட்டது.

Biggboss tamil fame actress samyuktha shan to join thalapathy66 crew

இந்நிலையில், இப்படத்தில் இணையவுள்ள பிக் பாஸ் பிரபலத்தின் அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

பிரபல மாடல் அழகியான சம்யுக்தா, பிக் பாஸ் சீசன் 4 மூலம் தமிழ் சின்னத்திரையில் பிரபலம் அடைந்தவர். இவர் சந்திரகுமாரி என்னும் சன் தொலைக்காட்சி தொடர், தனுசு ராசி நேயர்களே, துக்ளகே தர்பார் உள்ளிட்ட படங்கள் போன்றவற்றில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Biggboss tamil fame actress samyuktha shan to join thalapathy66 crew

இவர் தற்போது, விஜயின் தளபதி66 படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Share this post