பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் இதுவரை நடந்திராத சம்பவம்.. ஏன் என்ன ஆச்சு திடீர்னு. கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!

biggboss tamil 6 promo still not released this made fans to question why it happened as it never happened before

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.

biggboss tamil 6 promo still not released this made fans to question why it happened as it never happened before

இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.

biggboss tamil 6 promo still not released this made fans to question why it happened as it never happened before

பிக்பாஸ் சீசன் 6ல் திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடிகை ஆயிஷா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே. கதிரவன், பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் தற்போது விளையாடி வருகின்றனர்.

biggboss tamil 6 promo still not released this made fans to question why it happened as it never happened before

ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மெட்டி ஒலி சாந்தி, கானா பாடகர் அசல், ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர். மாடல் குயின்சி எவிக்ட் ஆகி வெளியேறினர்.

biggboss tamil 6 promo still not released this made fans to question why it happened as it never happened before

பிக் பாஸ் 6 நிகழ்ச்சி 60 நாட்களை தாண்டி நடந்து கொண்டிருக்கிறது. காலை 9 மணிக்கு, பகல் 12.00 மணிக்கு, மதியம் 3 மணிக்கு என தினமும் 3 ப்ரொமோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். நிகழ்ச்சியை விட ப்ரொமோ வீடியோக்கள் தான் சூப்பர் என்று பார்வையாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், இன்று காலை வெளியிட வேண்டிய ப்ரொமோ வீடியோ வெளியாகவில்லை.

biggboss tamil 6 promo still not released this made fans to question why it happened as it never happened before

மேலும் சரியாக 12 மணிக்கு வெளியாகும் 2வது வீடியோவும் அந்த நேரத்தில் வெளியாகவில்லை. இதை பார்த்த பார்வையாளர்கள், பிக் பாஸுக்கு என்னாச்சு, ஏன் ப்ரொமோ வீடியோக்களை வெளியிடவில்லை. நிகழ்ச்சியை ஒன்றும் நிறுத்திவிடவில்லையே. வார இறுதி நாள் என்பதால் உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து தானே ப்ரொமோ வீடியோ வெளியாகும். கமல் வருவதில் ஏதும் பிரச்சனையாகிவிட்டதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

Share this post