வெளியான பிக் பாஸ் 6 புது ப்ரோமோ.. பைனல் லிஸ்ட் இதோ.. அப்போ பிரச்சனை கன்பார்ம் !

biggboss season 6 tamil new promo and new list of contestants getting viral on social media

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.

biggboss season 6 tamil new promo and new list of contestants getting viral on social media

இந்நிலையில், ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியை கமல் 3 வாரமும், மீதம் சிம்பு அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது. இதையடுத்து, அடுத்த சீசன் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

biggboss season 6 tamil new promo and new list of contestants getting viral on social media

OTT தள 24 மணி நேர ஷோவில் 5 சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் சிலர் பங்கேற்றனர். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை முதல் 3 வாரம் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், அரசியல், ஷூட்டிங் என பிசியாக இருப்பதால் விலகுவதாக கமல் கூறி விட்டு விலகவே, சிம்பு மீதமிருந்த வாரங்கள் தொகுத்து வழங்கினார்.

biggboss season 6 tamil new promo and new list of contestants getting viral on social media

அடுத்ததாக பிக்பாஸ் சீசன் 6 துவங்கப்பட்டால், அதில் தொகுப்பாளராக கமல்ஹாசன் வருவாரா? சிம்பு வருவாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து வந்த நிலையில், 6-வது சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். இதனை பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.

biggboss season 6 tamil new promo and new list of contestants getting viral on social media

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கவதற்கான ஏற்பாடுகள் மற்றும் போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், வரும் அக்டோபர் 9ம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிப்பும் வெளியானது.

biggboss season 6 tamil new promo and new list of contestants getting viral on social media

இதுதவிர இதுவரை எந்த சீசனிலும் இல்லாத வகையில், இம்முறை பொதுமக்களில் ஒருவர் பிக்பாஸ் போட்டியாளராக கலந்துகொள்ள இருக்கிறார். இதற்காக நேர்காணல் வைத்து அந்த ஒரு போட்டியாளரை தேர்ந்தெடுக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

biggboss season 6 tamil new promo and new list of contestants getting viral on social media

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த விவரங்களும் அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளன. அதன்படி நடிகைகள் மனிஷா யாதவ், ஷில்பா மஞ்சுநாத், தர்ஷா குப்தா, ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா, தொகுப்பாளினிகள் டிடி மற்றும் அஞ்சனா, நடிகர் அஜ்மல், பாடகி சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, கவர்ச்சி நடிகை கிரண், டி இமானின் முன்னாள் மனைவி மோனிகா, ரக்க்ஷன், பாலிமர் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி, ஜிபி முத்து, காமெடி நடிகர் மதுரை முத்து ஆகியோரின் பெயர்கள் இதுவரை லீக் ஆகி உள்ளன.

biggboss season 6 tamil new promo and new list of contestants getting viral on social media

இதில் அதிகாரப்பூர்வமாக யாரெல்லாம் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில், பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் என்பது குறித்த ஒரு புகைப்படமும் வெளியாகி உள்ளது.

biggboss season 6 tamil new promo and new list of contestants getting viral on social media

இந்நிலையில், இதன் 6வது சீசன் வரும் ஒன்பதாம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. விஜய் டிவிகள் ஒளிபரப்பாக உள்ள இந்த ஆறாவது சீசனை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 18 பிரபலங்களும் ஆறு சாமானியர்களுடன் ஒளிபரப்பாக உள்ளதாம் பிக் பாஸ் ஷோ.

biggboss season 6 tamil new promo and new list of contestants getting viral on social media

இதில் கலந்து கொள்ள உள்ளவர்களின் லிஸ்ட் இதோ..

மைனா நந்தினி

சீரியல் நடிகை ஸ்ரீநிதி

மதுரை முத்து

பாடகி ராஜலட்சுமி

சீரியல் நடிகை ஆயிஷா

விஜே மகேஸ்வரி

சீரியல் நடிகர் மணிகண்டன்

அமுதவாணன்

டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்

ஜிபி முத்து

மாடலிங் ஷரினா

ஷில்பா மஞ்சுநாத்

ரக்ஷன்

ரோஷினி

ராஜா ராணி 2 சீரியல் நடிகை அர்ச்சனா

பங்கேற்க இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், சில பிரபலங்கள் மற்றும் 6 சாமானிய போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், தற்போது கமல் இருக்கும் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் கமல் “இந்த வீட்ல ஒவ்வொரு நாளும் திருப்பம்.. நூறு நாட்களும் இருக்கும்” என கூறி இருக்கிறார்.

Share this post