பிக்பாஸ் சீசன் 6 குறித்து விஜய் டிவி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ !
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியை கமல் 3 வாரமும், மீதம் சிம்பு அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது. இதையடுத்து, அடுத்த சீசன் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
OTT தள 24 மணி நேர ஷோவில் 5 சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் சிலர் பங்கேற்றனர். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை முதல் 3 வாரம் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், அரசியல், ஷூட்டிங் என பிசியாக இருப்பதால் விலகுவதாக கமல் கூறி விட்டு விலகவே, சிம்பு மீதமிருந்த வாரங்கள் தொகுத்து வழங்கினார்.
அடுத்ததாக பிக்பாஸ் சீசன் 6 துவங்கப்பட்டால், அதில் தொகுப்பாளராக கமல்ஹாசன் வருவாரா? சிம்பு வருவாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து வந்த நிலையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க நிறைய வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கவதற்கான ஏற்பாடுகள் மற்றும் போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த நிகழ்ச்சி விரைவில் துவங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இதில் VJ ரக்ஷன், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜலட்சுமி, சுசித்ராவின் முன்னாள் கணவர் காரத்திக் குமார், இசையமைப்பாளர் டி இமானின் முன்னாள் மனைவி, டிடி, பாலிமர் நியூஸ் சேனல் பிரபல செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், பிரபல சீரியல் நடிகை ஸ்ரீநிதி, தர்ஷா குப்தா மற்றும் ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.
இந்நிலையில், சாமானிய மக்களும் கலந்து கொள்ள முடியும் என அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்க தயாராகியுள்ளது விஜய் டிவி. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் விஜய் டிவிக்கு விண்ணப்பம் செய்யலாம் என்றும், தகுதி வாய்ந்தவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் வீடியோவில் பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜூ நடித்துள்ளார்.
இதையடுத்து ஏராளமானோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விண்ணப்பித்து வருவதாக கூறப்படுகிறது. விஜய் டிவியின் இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் துவங்க உள்ளது உறுதியாகியுள்ளது.