பாலிவுட் நடிகர்கள் கிட்ட நம்ம ஊர இப்படியா பேசுறது ? பிக்பாஸ் ராஜு மீது கோபமடைந்த சென்னைவாசிகள்
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று பிக் பாஸ் நிகழ்ச்சி. இதன் 5வது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் ராஜூ ஜெயமோகன் முதல் பரிசை தட்டிச் சென்றார். தற்போது பிக்பாஸ் ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களை கொண்டு ரியாலிட்டி ஷோவை நடத்தி வருகிறது விஜய் டிவி.
சமீபத்தில் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாகர்ஜுனா, ராஜமௌலி, ரன்பீர் கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த ஷோவை ராஜூவும், பிரியங்கவும் தொகுத்து வழங்கினர். அப்போது நிகழ்ச்சியில் கலகலப்பை ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் தொகுப்பாளரான ராஜூ ஜெயமோகன் ரன்பீருக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார்.
சென்னை, மதுரை, கோயம்புத்தூர் வட்டார மொழிகளை கற்றுக் கொடுத்தார். அதில் சென்னை மொழியை கற்றுக் கொடுக்கும் போது இவர் நகைச்சுவை என நினைத்து செய்த காரியம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
சென்னை வட்டார மொழியை இழிவுபடுத்தும் வகையில் அவர் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எங்களிடம் நல்ல வார்த்தைகள் எவ்வளவோ உண்டு. அவற்றை விட்டுவிட்டு சண்டையில் பயன்படுத்தும் வார்த்தைகளை ஏன் பாலிவுட் நடிகருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என சென்னை வாசிகள் கொந்தளித்துள்ளனர்.
இந்த பிரச்சனையால் நெட்டிசன்களிடன் வசமாக சிக்கியுள்ளார் ராஜூ. சோசியல் மீடியாவில் பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். இந்த பிரச்சினையை புரிந்து கொண்ட ராஜூவும் நகைச்சுவையாக செய்தது தவறாக மாறியதற்கு வருந்துகிறேன். யாரும் இரிட்டேட் ஆகவேண்டாம் என மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஏற்கனவே அந்த காணொளியில் சென்னை மக்கள் எப்போதும் இரிடேட்டாக இருப்பார்கள் என்று சொல்லியதுதான் மிகப்பெரிய குற்றமாகிவிட்ட நிலையில், தற்போது மீண்டும் அவர் இது போன்ற வார்த்தைகளை கூறி மன்னிப்பு கேட்டிருப்பது மேலும் சென்னைவாசிகளை கடுப்பேற்றியுள்ளது.