Video: Housemates'ஐ லெப்ட் ரைட் வாங்கிய Biggboss.. என்னாச்சு பிக்பாஸ்'க்கு.. ஏன் இப்டி பேசுறாரு..
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
சிவின் கணேசன், நடிகர் அசீம், நடிகை ரட்சிதா, ராப் பாடகர் ஏ.டி.கே, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே. கதிரவன், மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மெட்டி ஒலி சாந்தி, கானா பாடகர் அசல், ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, மாடல் குயின்சி, ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன் ராஜேஷ் எவிக்ட் ஆகி வெளியேறினர்.
தற்போது 75 நாட்களுக்கு மேல் ஆகி, இறுதிப்போட்டி நெருங்கி வரும் நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரையும் பிக்பாஸ் முகத்தில் அடித்தாற் போல் பேசுகிறார். ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் முழித்துக் கொண்டிருக்கின்றனர்.