'நீங்க அத கவனிசீங்களா..? பிக்பாஸ் ஜனனியை போட்டோ கம்பேர் செய்து மீம் பதிவிடும் நெட்டிசன்கள்!
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, ராப் பாடகர் ஏ.டி.கே, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே. கதிரவன் பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மெட்டி ஒலி சாந்தி, கானா பாடகர் அசல், ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, மாடல் குயின்சி, எவிக்ட் ஆகி வெளியேறினர்.
தற்போது இலங்கை தொகுப்பாளினி ஜனனி எலிமினேட் ஆகிவிட்டார். இந்த சீசனில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே ஆர்மி பெற்றவர் இலங்கையை சேர்ந்த தொகுப்பாளர் ஜனனி. நிகழ்ச்சியில் ஜனனி பேசிய கொஞ்சும் தமிழும், கியூட்டான எக்ஸ்பிரஸனும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டு வந்தது.
ஆனால் கடைசி சில வாரங்கள், இவர் அமுதவாணனின் கை பாகையாக இருந்து வந்ததாக ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். ஜனனி மோசமாக நடந்துகொள்ள ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார். இதன்மூலம் ஜனனி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர், முதல் முறையாக தனது இன்ஸ்டா பக்கத்தில் ஜனனி பகிர்ந்துள்ள பதிவு, அதிகம் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர், கமல்ஹாசனுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஜனனி,
“பிக்பாஸ் வீட்டில் நான் இருந்த போது என்னை ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் நன்றி. உங்களின் வாக்குகளால் என்னை அதிக அளவு ஊக்கப்படுத்தி உள்ளீர்கள். உங்களது எதிர்பார்ப்புகளை இத்தனை நாட்களில் என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். இனிமேல் உங்கள் அனைவரையும் என்னால் முடிந்த எல்லா வழிகளிலும் மகிழ்விப்பேன். மிக்க நன்றி” என ஜனனி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பிக்பாஸில் இவர் கலந்துகொண்ட போதும் தற்போதும் இருக்கும் புகைப்படத்தை நெட்டிசன்கள் பகிர்ந்து பிக் பாஸுக்கு முன் பிக் பாஸுக்கு பின் ஜனனி எப்படி உடல் எடை கூடிவிட்டார் என்று கூறி வருகின்றனர்.