'O** அவ்ளோ எலக்காரம் ஆயிட்டனா'.. கெட்ட வார்த்தையில் திட்டிய போட்டியாளர்.. இது 3வது முறை.. Viral Video
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, கானா பாடகர் அசல் கோலார், திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, மெட்டி ஒலி சாந்தி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சண்டைக்கு கொஞ்சம் கூட குறைச்சல் இல்லாமல் அரங்கேறி வருகிறது. தனலட்சுமி, அசீம், விக்ரமன் உள்ளிட்டோர் பெயர் எப்படியாவது வெளியே வந்து விடுகிறது. இந்த வாரம் பொம்மை டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த டாஸ்கை கடந்த சீசனிலேயே பிக் பாஸ் கொடுத்து இருந்தார். அப்போதே பலவிதமான கலவரங்கள் ஏற்பட்டிருந்தது, அதேபோல் இந்த பலவிதமான பொம்மை டாஸ்க் கொடுத்தவுடன் போட்டியாளர்கள் மத்தியில் கலவரம் தொடங்கி இருக்கிறது. இதனால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டும், மோதியும் விளையாடி வருகிறார்கள்.
இந்நிலையில், போட்டியாளர் மணிகண்டன் கெட்ட வார்த்தை பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, பொம்மை டாஸ்க்கில் மணிகண்டன் உடைய பொம்மையை யாருமே எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் கோபத்தின் உச்சிற்க்கு சென்று என்னுடைய பொம்மையை எடுக்க முடியாத அளவிற்கு நான் கேவலமாக போய்விட்டேனா? என்று சொல்லி O** என்ற கெட்ட வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்.
இந்த வீடியோவை தான் தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள். மணிகண்டன் இப்படி கெட்ட வார்த்தையில் பேசியது முதன்முறை அல்ல. இதனால் மணிகண்டனுக்கு ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
O** word use panrathu ellam yena nu solrathu 😡😡 @ikamalhaasan@vijaytelevision#BiggBossTamil6 pic.twitter.com/jO8HGaTtoK
— Dr.Ilavarasi (@Ilavarisirk) October 25, 2022