'பிக்பாஸ் ஆயிஷாவுக்கு 2 முறை திருமணம் ஆகிடுச்சா.. இப்போ Y டாலர் போட்ட செயின்'.. முன்னாள் காதலர் சொன்ன அதிர்ச்சி விஷயம்
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கானா பாடகர் அசல் கோலார், மெட்டி ஒலி சாந்தி உள்ளிட்டோர் ஏவிக்ட் ஆகிவிட்டனர். பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக வந்திருக்கும் நடிகை ஆயிஷா ஜீ தமிழ் சத்யா சீரியல் மூலமாக மிகவும் பிரபலம் ஆனவர். இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான`பொன்மகள் வந்தாள்’ என்ற சீரியலில் தான் நடித்து இருந்தார். பின் சீரியலில் ஆயிஷாவுக்கும், இயக்குனருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, தொடரில் இருந்து ஆயிஷா விலகினார்.
இவர் தமிழ் மொழி சீரியல் மட்டுமல்லாது வேறு மொழி சீரியலிலும் நடித்து இருக்கிறார். பிக் பாஸ் ஓவியாவை போல் முயற்சி செய்கிறேன் என்று ஏதாவது ஒன்றை ஆயிஷா செய்து ரசிகர்கள் மத்தியில் திட்டு வாங்கிக் கொண்டு வருகிறார். பிக் பாஸ் ஷோவில் மற்ற போட்டியாளர்கள் எல்லோரும் தங்களை பற்றிய கதையை சொன்ன நிலையில் ஆயிஷா மட்டும் அவரது past பற்றி வாயே திறக்கவில்லை.
அவரை பற்றிய உண்மைகளை அவரது முன்னாள் காதலர் தேவ் என்பவர் பேட்டியில் கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறார். ஆயிஷாவுக்கு மிக இளம் வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. முதல் திருமணத்தை தொடர்ந்து 18 வயதிலேயே 2ம் திருமணம் செய்துகொண்டார். அதுவும் செட் ஆகாததால் பிரிந்து விட்டார். அதன் பின் அவர் சென்னையில் படிக்கவந்த இடத்தில தான் என்னை சந்தித்து காதலிக்க தொடங்கினார்.
என் மூலமாக சீரியல்களில் அறிமுகம் ஆகி அதன் பின் என்னையும் பிரேக் அப் செய்துவிட்டு தற்போது வேறொரு நபருடன் ரிலேஷன்ஷிப்பில் அவர் இருக்கிறார் என தேவ் அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார். எங்களுக்குள் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. இடையில் விஷ்ணு வரும்போது தான் எங்களுக்குள் பிரிவு உண்டானது. இப்போது விஷ்ணு ஆயிஷாவுடன் இல்லை என்று கேள்விப்பட்டேன்.
இப்போ யோகேஷ் என்பவருடன் நட்பு பாராட்டிக் கொண்டு இருக்கிறார் ஆயிஷா. பிக் பாஸ் வீட்டுக்குள் போற அன்னைக்கு கூட ஆயிஷாவை யோகேஷ் தான் வழி அனுப்பி ஆயிஷாவை அது மட்டும் இல்லாமல் ஆயிஷாவுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணங்கள் ஆகிவிட்டதை மறைத்து தான் அவர் என்னை காதலித்து இருந்தார். சத்யா சீரியல் நடித்துக் கொண்டிருந்தபோது அந்த சீரியலின் ஹீரோ விஷ்ணுவையும் காதலித்து இருந்தார். பின் அவரை கழட்டிவிட்டார். இப்போது என்னுடைய தங்கையின் காதலன் யோகேஷை காதலித்து வருகிறார் என்று கூறியிருக்கிறார். மேலும் ஆயிஷா Y என்ற எழுத்துடன் கூடிய செயினை கழுத்தில் போட்டிருப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.