Freeze Task - எமோஷனல் தருணங்களுடன் வெளியாகி வைரலாகும் பிக்பாஸ் வீடியோ இதோ..!
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
சிவின் கணேசன், நடிகர் அசீம், நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, ராப் பாடகர் ஏ.டி.கே, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே. கதிரவன், மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மெட்டி ஒலி சாந்தி, கானா பாடகர் அசல், ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, மாடல் குயின்சி, ஜனனி, தனலட்சுமி எவிக்ட் ஆகி வெளியேறினர்.
தற்போது 75 நாட்களுக்கு மேல் ஆகியும் இவர் தான் தன்னுடைய பேவரைட் போட்டியாளர் என ரசிகர்கள் தேர்ந்தெடுத்து சொல்லும் அளவுக்கு இந்த சீசனில் ஒருவர் கூட இல்லை என்பது தான் கசப்பான உண்மை. அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டி.ஆர்.பி.யும் கடந்த சீசனைக் காட்டிலும் இந்த சீசன் மிகவும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இறுதிப்போட்டி நெருங்கி வரும் நிலையில், தற்போது டி.ஆர்.பி.யை எகிற வைக்கும் விதமாக ஃபிரீஸ்(Freeze) டாஸ்க்கை கொடுத்துள்ளனர்.
இந்த டாஸ்க்கில், உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் உறவினர்கள் டாஸ்க்கின் போது வீட்டுக்குள் அனுப்பப்படுவர். கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக வெளியுலகில் இருந்து யாரையும் பார்க்காமல் இருக்கும் ஹவுஸ்மேட்ஸை உற்சாகப்படுத்தும் விதமாக இந்த டாஸ்க் நடத்தப்படும். இதில் பல எமோஷனல் தருணங்களும் அடங்கி இருக்கும்.
அந்த வகையில், தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் எதிர்பார்க்கலேல என சொல்லி ஃபிரீஸ் டாஸ்க் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பிக்பாஸ். இதையடுத்து மைனாவின் கணவர் யோகி மற்றும் அவரது மகன் துருவ், ஷிவினின் தங்கை, அமுதவாணனின் மனைவி மற்றும் குழந்தைகள் வரும் காட்சிகள் இந்த புரோமோவில் இடம்பெற்று உள்ளன.
#Day79 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/RePUFbpBLM
— Vijay Television (@vijaytelevision) December 27, 2022