Viral Video: பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளர் ஷூவில் ப்ளூ டூத்.. பரிசோதித்த குழுவினர்.. விதி மீறல் நடந்ததா?

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
21 போட்டியாளர்களில் இப்போது 18 போட்டியாளர் உள்ளார்கள். கானா பாடகர் அசல் கோலார், மெட்டி ஒலி சாந்தி உள்ளிட்டோர் ஏவிக்ட் ஆகிவிட்டனர். ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மேலும், ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி எவிக்ட் ஆகி வெளியேறினர்.
ஏற்கனவே, பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அவ்வப்போது விதி மீறலில் ஈடுபட்டு வருவதாக, கமல்ஹாசன் கண்டித்து இருந்தார், மைக்கை கழட்டி வைத்து பேசுவது, சைகையில் பேசுவது, எழுதி காமிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால், கமல் அவர்களை கண்டித்தார். இப்படி ஹவுஸ்மேட்ஸ் விதி மீறலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இதன் உச்சகட்டமாக நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருக்கும், மணிகண்டன் தன்னுடைய ஷூவில் ப்ளூடூத் இருப்பதாக கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவரது ஷூவை பிக்பாஸ் குழுவினர் பரிசோதனை செய்துள்ளனர். இது குறித்து, மைனா நந்தினி 24 மணி நேர பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசியுள்ள வீடியோ வெளியாகி உள்ளது. மேலும் எவ்வித வெளி உலக தொடர்பும் இல்லாமல் இருக்கும் பிக்பாஸ் வீட்டிற்குள் இது போன்ற பொருட்களை கொண்டு வர கூடாது என்பதே நிபந்தனை ஆகும். இதனை மீறும் விதத்தில் ப்ளூடூத் பொருத்தப்பட்ட ஷூவை மணிகண்டன் உள்ளே எடுத்து வந்தது விதிமீறல் என்பதால் அவர் வெளியேற்றப்படுவாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
Bigg Boss took away Manikanta's shoe after he revealed it has Bluetooth connectivity.
— Bigg Boss Videos & Updates (@BBFollower7) November 15, 2022
#BiggBossTamil6 pic.twitter.com/WJNlSpedTl