முடிவுக்கு வந்த பாரதி கண்ணம்மா சீரியல்? யாரும் எதிர்பார்க்காத ஒரு ப்ரோமோ இதோ !
விஜய் தொலைக்காட்சியில் நிறைய சீரியல்கள் மத்த சேனல்களை பின் தள்ளி டிஆர்பி ரேஸில் முதல் 5 இடங்களில் பிடித்து வருவது வழக்கம். அப்படி பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் பாரதி கண்ணம்மா தொடர் டாப் இடத்தில் இருந்து வந்தது. இல்லத்தரசிகள் பேவரைட் ஆக மாறிய இத்தொடர், ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
டிஆர்பியில் டாப் இடத்தை பிடித்து வரும் சீரியல் தொடர் பாரதி கண்ணம்மா. இதில் தொடரில் கதாநாயகனாக நடித்து வருபவர் அருண் பிரசாத்திற்கு கடந்த வருடம் சிறந்த கதாநாயகன் விருது கிடைத்தது.
இத்தொடரில் முதலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி ஹரிப்ரியன், சில பல கமிட்மென்ட் காரணமாக இத்தொடரை விட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக, வினுஷா ரோஷினி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது 900 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. பரபரப்பாக ஓடி டிஆர்பியில் முன்னணியில் இருந்து வந்த இந்த தொடர், தற்போது மோசமான விமர்சனங்களை அதிகம் பெற்று வருகிறது. ஒரே கதையை சஸ்பென்ஸ் என்ற பெயரில் ஜவ்வு போல இழுத்து வருவதாக ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இந்த சீரியலை எப்போ தான் முடிப்பீங்க என நெட்டிசன்களே தினமும் கேட்கும் அளவுக்கு சீரியல் சென்றுகொண்டிருக்கிறது. பாரதியின் மருத்துவமனையில் தீவிரவாதிகள் புகுந்துவிட்ட நிலையில் அதில் கண்ணம்மா மற்றும் பாரதி ஆகியோர் இதை எப்படி சமாளிக்கிறார்கள் என்பது தான் தற்போது காட்டப்பட்டு வருகிறது.
கொஞ்சம் போர் அடிக்கிறது என ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு ஜவ்வாக, திரைப்படங்களின் கதைகளை சுட்டு இயக்குனர் போட்டு வருகிறார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஹாஸ்பிடலுக்குள் அதிரடி படையினர் புகுந்து எல்லோரையும் காப்பாற்றுகிறார்கள்.
அந்த நேரத்தில் பாரதி மட்டும் இல்லை என்பதால் அவரை தேடி செல்கிறார் கண்ணம்மா. அவரை ஒரு அறையில் கட்டி தொங்கவிட்டு இருக்கின்றனர். அவர் உடலில் டைம்பாம் கட்டி இருந்ததால், கண்ணம்மாவை வர வேண்டாம் என அவர் தடுக்கிறார்.
ஆனால், கண்ணம்மா விட்டு செல்லாமல் அவரை கட்டிபிடித்து கொள்கிறார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்துவிட்டால் இந்த வாரத்தோடு சீரியல் முடிந்துவிடுமா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.