பாரதி கண்ணம்மா தொடருக்கு 'சுபம்' போட்ட விஜய் டிவி.. கடைசி நாள் ஷூட்டிங்.. இணையத்தில் வைரலாகும் போட்டோ
விஜய் தொலைக்காட்சியில் நிறைய சீரியல்கள் மத்த சேனல்களை பின் தள்ளி டிஆர்பி ரேஸில் முதல் 5 இடங்களில் பிடித்து வருவது வழக்கம். அப்படி பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் பாரதி கண்ணம்மா தொடர் டாப் இடத்தில் இருந்து வந்தது. இல்லத்தரசிகள் பேவரைட் ஆக மாறிய இத்தொடர், ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
டிஆர்பியில் டாப் இடத்தை பிடித்து வரும் சீரியல் தொடர் பாரதி கண்ணம்மா. இதில் தொடரில் கதாநாயகனாக நடித்து வருபவர் அருண் பிரசாத்திற்கு கடந்த வருடம் சிறந்த கதாநாயகன் விருது கிடைத்தது. இத்தொடரில் முதலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி ஹரிப்ரியன், சில பல கமிட்மென்ட் காரணமாக இத்தொடரை விட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக, வினுஷா ரோஷினி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது 900 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. பரபரப்பாக ஓடி டிஆர்பியில் முன்னணியில் இருந்து வந்த இந்த தொடர், தற்போது மோசமான விமர்சனங்களை அதிகம் பெற்று வருகிறது. ஒரே கதையை சஸ்பென்ஸ் என்ற பெயரில் ஜவ்வு போல இழுத்து வருவதாக ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இந்த சீரியலை எப்போ தான் முடிப்பீங்க என நெட்டிசன்களே தினமும் கேட்கும் அளவுக்கு சீரியல் சென்றுகொண்டிருக்கிறது. சீரியலில் ஹேமா வேடத்தில் நடித்து வரும் லிசா சீரியல் இயக்குனர் அகிலன் அஞ்சலி உளிட்டோருடன் இணைந்து வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோவில் மக்கள் சீரியலை எப்படா முடிப்பீங்க என கேட்கிறாங்க ஆனால் எங்களுக்கு எண்டே கிடையாது என கூறுவது போல தெரிவித்திருந்தனர்.
தற்போது, பாரதி - கண்ணம்மா விவாகரத்து ஆன நிலையில், பாரதி தனது பழைய நினைவுகளை இழந்துள்ளார். இதனால் கண்ணம்மா பாரதிக்கு மீண்டும் பழைய நினைவுகளை மீட்டெடுக்க முயற்சி செய்து வருகிறார். இனி இதை வைத்து இன்னும் சில வருடங்களுக்கு சீரியலை ஓட்டுவார்களோ என நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர்.
ஆனால், இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்திற்குள் இந்த சீரியல் முழுவதுமாக முடிவுக்கு வரவுள்ளது. இப்படியான நிலையில் சீரியல் குழுவினர் கடைசி நாள் ஷூட்டிங்கில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட இணையத்தில் வைரலாகி வருகிறது.